மானாமதுரை அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
இந்த கல்லானது ஒரு கல்வெட்டாக மட்டுமல்லாமல் எல்லைக் கல்லாகவும் பயன்பட்டிருக்கிறது என்பதை அறியலாம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் ஒரு கல் இருப்பதாக காளத்தியேந்தலை சேர்ந்த சமயக்குமார் என்ற இளைஞர் கொடுத்த தகவலின்படி பண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில், இந்த கல்வெட்டானது 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரி ஓவியத்துடன் கல்வெட்டு காணப்படுகின்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
— Arunchinna (@iamarunchinna) April 26, 2022
Further reports to follow - @abpnadu | #sivagangai | #கீழடி | #மானாமதுரை | #கல்வெட்டு | #TamilNadu ..... pic.twitter.com/fjqP6QFTTw






















