மேலும் அறிய
Advertisement
நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிப்பு
நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் ஒரு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நெடுகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அக்னீஸ்வரன், யோக பிரகாஷ், தனுஷ்பாபு ஆகியோர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் நரிக்குடி அருகே உள்ள கிருதுமால் நதியின் கிழக்கு கரையில் மேற்பரப்பை ஆய்வு செய்தனர். அப்போது சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், மக்கள் முதன் முதலில் நீர் நிலைகளின் அருகில் தான் குடியேறினார்கள். அதிலும் குறிப்பாக ஆற்றங்கரை பகுதிகளில் தான் குடியேறினார்கள். விவசாயத்திற்கும், கால்நடைகள் வளர்ப்பதற்கும் தண்ணீர் தேவை அதற்கு இந்த ஆறுகள் மிகவும் உதவியாக இருந்தன. அது போல் ஆற்றில் வரும் நீரை நேரடியாக குடிநீராக பயன் படுத்த முடியாது. அதற்காகத்தான் இந்த உறை கிணறும், இந்த உறை கிணறுக்கு நீர் கொண்டு வர நீர் வடிகுழாயும் பயன்படுத்தப்பட்டன. நாங்கள் கண்டறிந்த உறை கிணறானது மிகவும் தொன்மையானது ஆகும். அந்த கிணற்றில் நீர் பாயும் விதமாக வடிவமைக்கப்பட்ட வடிகுழாய் மண் அரிப்பினால் தெளிவாக தென்பட்டது.
அதன் அருகில் ஏராளமான கருப்பு, மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகளும், அதன் விளிம்பு பகுதிகளும் அந்த பகுதியில் பரவிக் கிடக்கின்றன. இங்கு காணப்பட்ட உறைகிணறு உறையின் உயரம் ஒன்றரை அடியும் அதன் தடிமன் 2 இன்ச் அளவிலும், இந்த உறையானது மேற்பகுதி குவிந்தும் கீழ்ப்பகுதி சற்றே விரிந்தும் ஒவ்வொரு உறையும் அடுத்தடுத்து பொருந்தும் விதமாக வடிவமைத்துள்ளனர். தற்போது வெளியில் தெரியும் உறையின் எண்ணிக்கை 6 ஆகும் மேலும் இந்த உறை கிணற்றிற்கு நீர் சேமிக்கும் விதமாக நீர் வடிகுழாய் அமைப்பும் தென்பட்டது, இந்தக் குழாய்களின் எண்ணிக்கை 10 ஆகும் ஒவ்வொரு குழாயின் நீளம் 1 அடி இருக்கிறது ஒரு பகுதி குவிந்தும் மற்றொரு பகுதி சற்றே விரிந்தும் ஒன்றன்பின் ஒன்றாக பொருந்தும் விதமாக குழாய்களை வடிவமைத்துள்ளனர்.
இங்கு காணப்படும் உறைகிணறு வடிகுழாய், பானை ஓடுகளை பார்க்கும்போது சங்க கால மக்கள் தற்போதைய நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் ஒரு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. மேலும் இந்த தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தில் அரசு முறையான அகழாய்வு மேற்கொண்டால் பல புதிய தடயங்களை வெளிகொணர வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கூறினர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Festival : விவசாயத்தை கொண்டாடும் கிராம திருவிழா.. மதுரையில் களைகட்டிய நல்லேறு கட்டுதல் நிகழ்வு..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion