மேலும் அறிய
Advertisement
Madurai Hc: பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்: ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா ஆஜர் !
நீதிமன்ற மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை தனியார் முதியோர் இல்லத்திற்கு வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் IAS அதிகாரி பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் விதமாக ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் மூத்த IAS அதிகாரி பொன்னையா இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர் ஆகினர்.
உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாததால் ஐஏஎஸ் அதிகாரி பொன்னையாவிற்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு.
அபராத தொகையை மூன்று வாரத்தில் முதியோர் இல்லத்திற்கு செலுத்தவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சிவலிங்கம் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றினார். இவருடைய பனிக்காலத்தை பணி நிரந்தரம் செய்து பணி வரன்முறை செய்யக் கூடிய வழக்கில் பல வருடங்களாக பதில் அறிக்கை தாக்கல் செய்யாததால் நீதிபதி பட்டு தேவானந்த் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தார் நேரில் வராததால் இயக்குனருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து நீதிபதி மீண்டும் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா நீதிபதி பட்டு தேவானந் முன்பு ஆஜராகினார்.
மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க - விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை
நீதிபதி முன் ஆஜரான ஐஏஎஸ் அதிகாரிக்கு மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி பல்வேறு நிகழ்வுகள் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றுவதாகவும் இந்த வழக்கில் பதில் அளிக்க அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் ஐஏஎஸ் அதிகாரிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கில் நீதிமன்றம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு பல வருடங்களாக ஆனதால் நீதிமன்ற மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை தனியார் முதியோர் இல்லத்திற்கு வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள், சிறுவர்கள் - மதுரையில் 30க்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பற்றி எரிந்த கார், சரக்கு வாகனம்: முன் பகையால் மதுரையில் அரங்கேறும் அட்டூழியம்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion