மேலும் அறிய

Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

‘’நான் world chess champion ஆவேன்’’ என அன்று அந்த 7 வயது சிறுவன் கூறியபோது வெறும் கனவு என நினைத்த அத்தனை பேரும் வாயில் விரல் வைக்கும் அளவிற்கு ‘’அது வெறும் கனவு இல்லை வெற்றி கனவு’’ என நிரூபித்துவிட்டார் world champion குகேஷ்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் 18 வயது இளம்வீரர் குகேஷ் தொம்மராஜு. உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் சேர்த்தே தட்டிச்சென்றுள்ளார் குகேஷ். யார் இந்த இளம் வீரர்..7 வயது சிறுவனின் ஆசை 18 வயது இளைஞனின் சாதனையாக உருமாறியது எப்படி என்பதை காணலாம்..

கடந்த 2006 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார் குகேஷ் தொம்மராஜு..அப்பா ரஜினிகாந்த் டாக்டர் அம்மா பத்மா மைக்ரோபயாலஜிஸ்ட். 7 வயதிலேயே செஸ் மீது ஆர்வம் கொண்ட மகனை கோச்சிங் க்ளாஸ் அனுப்பி ஊக்குவித்துள்ளனர் இந்த ப்ரௌட் பேரண்ட்ஸ். வீக்கெண்டில் செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை மேலும் மெருகேற்றினார். ஆரம்பம் முதலே வெற்றியை மட்டுமே சுவைக்க பழகினார் குகேஷ்.. உலகின் இளம் வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற  வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது..

2015-இல் நடந்த பள்ளிகளுக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றார் குகேஷ். அந்த வெற்றி அவரது கனவை நோக்கி பயணிக்க பெரும் உத்வேகத்தை அளித்தது. அடுத்ததாக 2018-ல் நடந்த 12 வயதுக்குப்பட்டோருக்கான பிரிவில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டித்தூக்கினார் குகேஷ்

2018-இல் நடந்த ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் மற்றும் குழு என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை குவித்தார்.
2017-ல் நடந்த 34வது Cappelle-la-Grande Open செஸ் தொடரில், இளம் வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையையும் படைத்தார் குகேஷ். 

இப்படி வெற்றி மீது வெற்றிகளை குவித்து வந்த குகேஷ்.. 17 வயதில் செஸ் ரேங்கிங்கில் 2750 புள்ளிகளை பெற்றார். சில நாட்களிலேயே 37 ஆண்டுகளாக சாம்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை ஓவர்டேக் செய்து அசுர சாதனை படைத்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதன்முதலாக தங்கம் வென்று சாதனை படைத்தது.
அதிலும் குகேஷின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் தங்க மகன்குகேஷ். 
இப்படி வெற்றி பயணத்தை மேற்கொண்ட குகேஷ்-க்கு இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் டிங் லிரனுக்கு எதிராகப் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் இன்று நடந்த 14வது போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று 
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.   விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன் ஆன இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்
 குகேஷ். மேலும் அவர் ஆசைப்பட்டதை போலவே மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற நபர் என்ற சாதனையையும் பெற்றுவிட்டார் குகேஷ்..

7 வயது குகேஷின் கனவு 18 வயதில் நனவாக மாறியதை கொண்டாடும் நொடியில் கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வேர்ல்டு யங்கஸ்ட் செஸ் சாம்பியன் குகேஷ் தொம்மராஜு

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget