மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.1,500க்கு விற்பனை. மல்லிகை வரத்து மிகக் குறைவாக உள்ள காரணத்தால் இந்த கிடுகிடு விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விநாயக சதுர்த்தி என்ற  மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம்.

விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை

மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.1,500க்கு விற்பனை. மல்லிகை வரத்து மிகக் குறைவாக உள்ள காரணத்தால் இந்த கிடுகிடு விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம் அருகேயுள்ள வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில் மலர் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்கு சோழவந்தான், பாலமேடு, அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சத்திரப்பட்டி, வலையங்குளம், சிலைமான் உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அண்டை மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை
 
நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கும் மேல் பூக்கள் இங்கே விற்பனையாகும் நிலையில், மதுரையின் தனிச்சிறப்பு மிக்க அடையாளமாகவும், தரம், மணம், தன்மை காரணமாக மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகை சற்றேறக்குறைய 7 டன்னுக்கும் மேலாக இங்கே விற்பனையாகிறது. மதுரை மலர்ச் சந்தையில் நிர்ணயிக்கப்படுகின்ற பூக்களின் விலையே பெரும்பாலான தென் மாவட்டங்களின் விலையாக உள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும், தற்போது பூக்கள் வரத்து குறைவு காரணமாக மதுரை மல்லிகை இன்று காலையில் கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. பிற்பகலில் ரூ.1,300 மற்றும் ரூ.1,200க்கும் விற்பனையானது. பிற பூக்களைப் பொறுத்தவரை, சம்பங்கி ரூ.200, முல்லை ரூ.800, பிச்சி ரூ.700, அரளி ரூ.250, சென்டு மல்லி ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி எதிரொலி - ரூ.1,500க்கு விற்பனையான மதுரை மல்லிகைப் பூ விலை
 
இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'மல்லிகையைப் பொறுத்தவரை பெருமளவு வரத்துக் குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்ததோடு, தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருகின்ற காரணத்தால் ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்துக்குமானால் விலை குறைய வாய்ப்புண்டு' என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget