காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி காவலரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் துப்பாக்கி சூடு
திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் பாலாஜி பவன் பென்சன் காம்பவுண்ட் சாலை பகுதியில் திமுக நிர்வாகியாக இருந்த முகமது இர்ஃபான் என்பவரின் தலையை சிதைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவருக்கு தொடர்பு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி இர்ஃபான் மற்றும் அவருடைய நண்பர் முகமது அப்துல்லா இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்டுக்கு சென்றனர் அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்த நிலையில் இர்ஃபான் என்பவருடைய முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகமது அப்துல்லா படுகாயம் அடைந்து காணப்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமது அப்துல்லாவை மீது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இர்ஃபான் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர், படுகொலை செய்யப்பட்ட இர்ஃபான் மீது கொலை உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலவியில் இருப்பது தெரியவந்தது. ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவைச் சேர்ந்த பட்டறை சரவணன் படுகொலையில் இர்ஃபான் முக்கிய குற்றவாளியாக இருக்கின்றார் என்பதும் தெரியவந்த நிலையில், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படையை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
கொலையாளிகள் சிலர் கோர்ட்டில் ஆஜராகவர்கள் என தெரியவந்த நிலையில் நீதிமன்றங்களில் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டது. இரண்டு பேர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் நான்கு படுகொலைகள் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இர்ஃபான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ரிச்சர்ட் சச்சினை காவல்துறையினர் விசாரணைக்கு எடுத்த நிலையில் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரிச்சர்ட் சச்சின் காவலர் அருண் பிரசாதின் இடது கையில் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். அப்பொழுது ஆய்வாளர் வெங்கடாசலபதி தனது கை துப்பாக்கியால் ரிச்சர்ட் சச்சினின் வலது காலில் மொட்டிக்கு கீழே சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்தார் ரிச்சர்ட் சச்சின் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அறிவாளால் வெட்டப்பட்ட காவலர் அருண் பிரசாத் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.