பழனி அருகே சத்திரப்பட்டி டோல்கேட் வசூலுக்கு எதிர்ப்பு; 15 ஊர் கிராம மக்கள் போராட்டம்
நான்கு வழிச்சாலை முழுமையாக நடைபெறாத நிலையில் திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பழனி அருகே சத்திரப்பட்டி டோல்கேட் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டி டோல்கேட் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழி சாலைகள் அமைப்பதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று முடிவடையும் முன்பே சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கட்டணம் வசூலிக்கும் இடம் திறக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்யப்பட்டு வருகிறது .
இதற்கு பழனி, சத்திரப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, வேலூர், வீரலப்பட்டி உள்ளிட்ட பதினைந்து கிராம மக்கள் இந்த பகுதியில் நான்கு வழிச்சாலை முழுமையாக நடைபெறாத நிலையில் திறக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 15 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன், பழனி டிஎஸ்பி சரவணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை பணிகள் முடிவு பெறாமல் வசூலிக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.