திண்டுக்கல் நீதிமன்றத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்ற நபர் உயிரிழப்பு
நீதிமன்றத்தின் மாடியிலிருந்து போக்சோ வழக்கில் விசாரணைக்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி.
நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி :
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் மாடியிலிருந்து போக்சோ வழக்கில் விசாரணைக்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சித்த நிலையில், சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பாலியல் புகார் :
திண்டுக்கல் மாவட்டம் ஏபி நகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 36). இவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக போக்ஸோ வழக்கு தொடரப்பட்டது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த (19.03.2024) அன்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்து ஷாஜகான் போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மூன்றாவது தளத்தில் அமைந்துள்ள சிறப்பு போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
Panguni Uthiram: "சிவன் முதல் முருகன் வரை" - பங்குனி உத்திரம் நன்னாளில் நடந்த தெய்வ திருமணங்கள்!
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது நீதிமன்றத்தில் இருந்து வெளியில் ஓடிவந்து மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஷாஜகானை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)