மேலும் அறிய

நெருங்கும் தீபாவளி... அய்யலூர் ஆட்டுச் சந்தையில்   3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

ஒரே நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒவ்வொரு பண்டிகைகளும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. அதிகாலை எழுந்து, புத்தாடைகள் உடுத்தி விதவிதமான இனிப்பு வகைகளுடன் பட்டாசுகள் வெடித்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில் அசைவ உணவிற்கும் பஞ்சம் இருக்காது. பெரும்பாலான திருவிழாக்களில் அசைவ  உணவுகளே அதிகளவில் இடம்பெற்று வருகிறது. இதனால் ஆடு , கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் அதிகளவில் அன்று விற்பனையாகி வருகிறது.

ABP Southern Rising LIVE: ”ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம் மற்றும் ஒரு மொழியை கட்டாயப்படுத்த முடியாது" - கனிமொழி சோமு

நெருங்கும் தீபாவளி... அய்யலூர் ஆட்டுச் சந்தையில்   3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்பாடி அருகே என்ஜின் இல்லாமல் வழியில் நின்ற பயணிகள் ரயில்; சீரமைப்பு பணி தீவிரம்!

நெருங்கும் தீபாவளி... அய்யலூர் ஆட்டுச் சந்தையில்   3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

திண்டுக்கல் மாவட்டத்திலேயே அய்யலூர் சந்தையில் தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் என்பதால் கிராம பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வரும் 31-ம்   தேதி  தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று அய்யலூரில் ஆட்டுச் சந்தை கூடியது. அதிகாலை 2 மணி முதலே ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் சந்தையில் குவிந்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டது. சந்தைக்குள் இடம் இல்லாததால் சந்தைக்கு வெளியே சாலை வரை கூட்டம் அலைமோதியது. மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்த போதிலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடு மற்றும் கோழிகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

IND Vs NZ 2nd Test: ஏமாற்றம் தந்த விராட் கோலி - 156 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட் - நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலை

நெருங்கும் தீபாவளி... அய்யலூர் ஆட்டுச் சந்தையில்   3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு  8500 ரூபாய் வரையிலும், செம்மறி ஆடு 7000 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 450 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல் அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் சேவல்களை சண்டையிட வைத்து வாங்கி சென்றனர். அய்யலூர் சந்தையில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE:
ABP Southern Rising LIVE: "தொகுதி மறுசீரமைப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது" - தெலங்கானா பா.ஜ.க எம்.பி ரகுநந்தன் ராவ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!CJI Sanjiv Khanna | பாஜகவின் சிம்ம சொப்பனம்! சந்திரசூட்டின் நம்பிக்கை!அடுத்த CJI சஞ்சீவ் கண்ணாSalem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறைTVK Maanadu :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டாட்சியே இப்போதைய தேவை" ஏபிபி மாநாட்டில் ஓங்கி ஒலித்த திமுக எம்பி கனிமொழி சோமுவின் குரல்!
ஏபிபி மாநாட்டில் வெற்றியின் ரகசியத்தை உடைத்த ராபிடோ இணை நிறுவனர் அரவிந்த் சங்கா!
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
ABP Southern Rising LIVE:
ABP Southern Rising LIVE: "தொகுதி மறுசீரமைப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது" - தெலங்கானா பா.ஜ.க எம்.பி ரகுநந்தன் ராவ்
TVK Manaadu : தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
TNPSC Reforms: 2024-ல் கணினி வழித் தேர்வு முறை அறிமுகம்; ஏன்? டிஎன்பிஎஸ்சி தகவல்
TNPSC Reforms: 2024-ல் கணினி வழித் தேர்வு முறை அறிமுகம்; ஏன்? டிஎன்பிஎஸ்சி தகவல்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Embed widget