ஆடி 18: திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உச்சம்! விவசாயிகள் மகிழ்ச்சி, காரணம் என்ன?
ஆடிப்பெருக்கு இருந்தாலும் முகூர்த்த நாட்களோ, கோவில் திருவிழாவோ இல்லாத காரணத்தினால் பூக்கள் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது.

ஆடி 18ஐ முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிரடி உயர்வு. மல்லிகை பூ 1500 விற்பனை கனகாம்பரம் 1,000-க்கு விற்பனை முல்லைப்பூ 700 க்கு விற்பனை விசாயிகள் மகிழ்ச்சி வரத்து குறைவு.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு, வீரக்கல், பஞ்சம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, அதிகாரிப்பட்டி, உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகளின் பிரதான தொழிலே பூ விவசாயம் தான். இக்கிரமங்களில் நாள்தோறும் விளையக்கூடிய பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து தமிழக முழுவதும் கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்வது வழக்கம். திண்டுக்கல் பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ஜாதிப்பூ, சம்பங்கி, ரோஜா, உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 டன் பூக்கள் விற்பனைக்கு வரும் இன்று 10 டன் பூக்களே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் முகூர்த்த நாட்களோ, கோவில் திருவிழாவோ இல்லாத காரணத்தினால் பூக்கள் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப்பூ தற்பொழுது 1,500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, ரூ 400க்கு விற்பனையான கனகாம்பரம் தற்பொழுது ரூ 1,000 விற்பனையாகிறது, 100 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ தற்பொழுது 700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, 75க்கு விற்பனையான ஜாதி பூ தற்பொழுது 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது, 60 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ ரோஸ் தற்பொழுது 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, 40 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ தற்பொழுது 300ரூபாய்க்கு விற்பனை ஆகிறது, செண்டுமல்லி 300 கோழி கொண்ட 250 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

குறிப்பாக மாலை கட்ட பயன்படுத்தக்கூடிய சம்பங்கி, அரளி, ரோஸ், சம்பங்கி, கோழிக்கொண்டை வாடாமல்லி போன்ற பூக்களின் விலை உயர்ந்துள்ளதுஇதே போல் அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளதுபூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து அதிக அளவில் பூக்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம் இதன் காரணமாக பூக்களின் விலை தொடர்ந்து விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.





















