மேலும் அறிய

கிளி ஜோசியத்துக்கு தடையா? அப்ப எலி ஜோசியம் பாப்போம்..!

எலி ஜோதிடத்திற்கு ரூபாய் 30 முதல் 50 வரை காணிக்கையாக பெறுவதாக எலி ஜோதிடர் முருகேசன் கூறுகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் எலியுடன் ஒருவர் ஜோதிடம் பார்த்து வந்தார். அவரிடம் எலி ஜோதிடம் பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவு கூடுகின்றனர்.

கிளி ஜோதிடம் என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் இந்திய சிங்கப்பூரர்களால் பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள ஒரு வகை ஜோதிடமாகும். கார்டுகளை எடுக்க பயிற்சியளிக்கப்பட்ட ரோஜா வளையம் மற்றும் அலெக்ஸாண்ட்ரைன் கிளிகளைப் பயன்படுத்துவது இதில் அடங்கும்.


கிளி ஜோசியத்துக்கு தடையா? அப்ப எலி ஜோசியம் பாப்போம்..!

ஒரு கிளி ஜோதிடர் பொதுவாக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழைப்பதற்காக அல்லது மக்கள் கூடும் சாலையின் ஓரத்தில் அமர்ந்திருப்பார். பயிற்சி பெற்ற ஒன்று அல்லது இரண்டு கிளிகளைக் கொண்ட ஒரு கூண்டு அவரிடம் இருக்கும். அட்டைகள் அவருக்கு முன்னால் விரிந்து அல்லது அடுக்கி வைக்கப்பட்டும், அவை இந்திய அண்ட அமைப்பைக் குறிக்கும் எண்ணிக்கையில் 27 ஆகும். ஒவ்வொரு அட்டையிலும் இந்து தெய்வத்தின் உருவமும் சில அட்டைகளில் புத்தர் அல்லது கன்னி மேரி குழந்தை இயேசுவின் உருவங்களும் உள்ளன.

ஒருவர் ஜோசியம் சொல்பவரின் முன் அமர்ந்தால், பின்னவர் கூண்டைத் திறந்து கிளியை வெளியே விடுவார். ஒருவருக்கு ஒரு அட்டையை எடுக்க அவர் கிளிக்கு அறிவுறுத்துகிறார். கிளி அட்டைகளை நோக்கிச் சென்று, அடுக்கிலோ அல்லது விரிக்கப்பட்ட இடத்திலோ ஒன்றைத் எடுத்து ஜோதிடரிடம் கொடுக்கிறது. அதன் பிறகு மீண்டும் தன் கூண்டுக்குள் செல்கிறது. ஜோதிடர் அட்டையைத் திறந்து, படத்தின் அடிப்படையில்  ஜோதிடம் கூறுவார்.


கிளி ஜோசியத்துக்கு தடையா? அப்ப எலி ஜோசியம் பாப்போம்..!

இப்படி இது வரையில் இருந்த கிளி ஜோதிடத்திற்கு மாற்றாக  தென்காசியை சேர்ந்த முருகேசன் (55) என்பவர், கடந்த பல ஆண்டுகளாக கிளியை வைத்து ஜோதிடம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கிளியை வைத்து ஜோதிடம் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக கிளி ஜோதிடம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கிளி ஜோதிடத்திற்கு பதிலாக எலி ஜோதிடம் பார்த்து வருகின்றனர். வீட்டில் வளரும் எலியை பிடித்து அதற்கு குறி சொல்லும் சீட்டு எடுத்துக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் எலி ஜோதிடம் பார்த்து வருகின்றனர். கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் எலி,  ஜோதிடர் முருகேசன் கூறுவதைக் கேட்டு ஜோதிடம் பார்க்கு நபரின் பெயரைச் சொல்லி, அவர் பெயருக்கு ஒரு சீட்டு எடுத்துக் கொடு! என்றவுடன் ஜோதிடர்  முன்பாக குவித்து வைக்கப்பட்டிருந்த சீட்டுகளை எடுத்து ஜோதிடர்  முருகேசன் கையில் எலி கொடுக்கிறது. பின்னர், அவர் அந்த நபரின் நிலை குறித்து, எதிர்காலம் குறித்து ஜோதிடம் சொல்கிறார். 


கிளி ஜோசியத்துக்கு தடையா? அப்ப எலி ஜோசியம் பாப்போம்..!

இதனை பார்ப்பவர்கள் மிகுந்த ஆர்வமாக அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேடிக்கை பார்த்து வருவதுடன், எலி ஜோதிடம் பார்க்க குவிந்து வருகின்றனர். எலி ஜோதிடம் கூறுவது போல் சிலருக்கு நல்லது நடந்து வருவதாகவும்  கூறப்படுகிறது. தான் வளர்த்து வரும் எலிக்கு கேரட், சாப்பாடு, இட்லி உள்ளிட்ட உணவுகளை கொடுத்து வருகிறார். எலி ஜோதிடத்திற்கு ரூபாய் 30 முதல் 50 வரை காணிக்கையாக பெறுவதாக முருகேசன் கூறுகிறார். தற்போது நிலக்கோட்டை மற்றும் அணைப்பட்டி பகுதியில் எலி ஜோதிடம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
Embed widget