புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரி படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்பை படிக்கும் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பினால் தங்களின் கல்வி நிறுவனங்கள் மூலம் வருகிற 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Imran Khan Firing: பேரணியில் நடந்த துப்பாக்கிச்சூடு - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பலர் காயம்!
https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதி வரம்பு குறித்து மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவிகளுக்கு வருகிற 11-ந்தேதி வரை பயிற்சி கொடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் செயல்படும் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவிகள் ஆதார் அட்டை, கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண், மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்