மஞ்சள் நிற ஜெர்ஸி... தோனி படம்; நடன நிகழ்ச்சியில் கலக்கிய மாணவர்கள்
கோடை வெயில் அதிக அளவில் உள்ள நிலையில், பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வெயிலிலிருந்து தற்காத்து கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
வத்தலகுண்டு அருகே, பள்ளி ஆண்டு விழாவில், சி.எஸ்.கே (சென்னை சூப்பர், கிங்ஸ்) கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் 7-ம் நம்பர் தோனி படத்தோடு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கணவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், 10-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ம.கா.பா. ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாணவ, மாணவிகள் எதையும் நேர்மறையாக நினைக்க வேண்டும். எதிர்காலத்தில் நாம் என்ன ஆக விரும்புகிறோமோ? அதுவாக நினைத்து கற்பனையில் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும் என்றார். பள்ளி மாணவர்கள் சிஎஸ்கே வீரர் தோனியின் 7-ஆம் நம்பர் மஞ்சள் பனியன் அணிந்து, கிரிக்கெட் மட்டையுடன் நடனம் ஆடினர்.
சென்னை அணி விளையாடிக்கொண்டிருந்த நிலையில், அதனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், ஆரவாரம் செய்து பாராட்டினர். விழாவில், செல்போன் தீமை பற்றிய நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கோடை வெயில் அதிக அளவில் உள்ள நிலையில், பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட, அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வெயிலிலிருந்து தற்காத்து கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், சென்னை தொழில் அதிபர் இந்திரா கந்தசாமி மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CBSE Exam Result 2024: சிபிஎஸ்இ 10, 12 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?