கொடைக்கானல் வனப்பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்ட அரிய வகை பறவைகள்
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், 100க்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டதாக வனத்துறை தகவல்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில், 100க்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டதாக வனத்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட வனப்பகுதிகளில் கடந்த மாதம் 26ஆம் தேதி பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டு இரண்டு நாட்கள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது, இந்த பணியில் வனப்பணியாளர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் நான்கு குழுக்களாக பிரிந்து கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாம்பே சோலா, வட்டக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறுப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பறவைகள் கணக்கெடுப்பின் முடிவில் ஒயிட் பெல்லி சோலை கிளி, கிரிமசன் பேக்டு சன் பேர்ட், இந்தியன் ஸ்மிட்டர் பப்புலர், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சஸ், நீலகிரி பிளை கேட்சர் மற்றும் புறா வகைகள்,மலபார் அணில் வகைகள்,மைனா வகைகள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட அரியவகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கொடைக்கானல் வனச்சரகர் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பகுதியில் 5 வருடங்களுக்கு பிறகு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
A.R.Rahman | இந்தி மொழி சர்ச்சை: வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பதிவு ! - அமித்ஷாவுக்கு பதிலடியா ?
தேனி : உயரம் மாறி மாறி காட்சி தரும் சிவலிங்கம்.. பூலா நந்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்