Cyclone Mandous: கொடைக்கானலில் சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல மக்களுக்கு தடை..! எந்தெந்த பகுதிகள்..?
மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மாண்டஸ் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மழையால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் மிகவும் விருப்பப்பமான பகுதியாக கொடைக்கானலில் உள்ள குணா குகை, பேரிஜம் ஏரி, மோயர் சதுக்கம் பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.