Madurai : 'கரிகாலன்' காளைக்கு பர்த் டே! கேக் வெட்டி கொண்டாட்டம்! கிடா வெட்டி விருந்து! இது மதுரை ஸ்பெஷல்!
அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அன்னதானம் வழங்கிய இளைஞர்களை பலரும் பாராட்டினர்.
’ ஜல்லிக்கட்டு ‘ போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டது. பழமையை நேசிக்க வேண்டும் என்ற குரல் தன்னெழுச்சியாகவும் விதைக்கப்பட்டது. இதனால் உணவு முறைகளைக் கூட பெரும்பாலானோர் மாற்றிக் கொண்டனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீட்புக்கு பிறகு அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி வளர்த்து வருகின்றனர். அந்த காளைக்கு பிறந்தநாள் அன்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதோடு கிடா விருந்தும் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நினைவாக அலங்காநல்லூர் கிராம இளைஞர்கள் 'கரிகாலன்' என்ற காளையை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் காளையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி, கிடா விருந்து வழங்கியுள்ளனர். தங்கள் வீட்டு பிள்ளையாக காளையை வளர்ப்பதாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.#jallikattu| #madurai pic.twitter.com/oZx4TwFEII
— Arunchinna (@iamarunchinna) May 2, 2022