Crime: தங்கையை திருமணம் செய்து தர மறுத்த அண்ணனை வெட்டிக்கொன்ற இளைஞர்..! திண்டுக்கல்லில் பரபரப்பு..
திண்டுக்கல் அருகே தங்கையை திருமணம் செய்து வைக்காத அண்ணனை இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் இவர் தனது மகன் ஜோதி (27) மற்றும் மகள் பிரியா (20) விவசாய வேலை பார்த்து வருகிறார்கள். ஜோதி துபாயில் கட்டிட வேலை பார்த்துவிட்டு தங்கையின் திருமணத்திற்காக கடந்த 6 மாதத்திற்கு முன் சொந்த ஊர் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு இவரது தங்கை பிரியாவிற்கும் மதுரை மாவட்டம் கச்சைபட்டியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
crime: தோட்டத்தில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை - நத்தம் அருகே பரபரப்பு
கடந்த இரண்டு வாரங்களாக பத்திரிக்கை வைப்பது உள்ளிட்ட திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டில் (திங்கட்கிழமை இரவு) ஜோதி தனியாக தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில் இவரது கழுத்தில் பின்பகுதியில் மர்ம நபர் வெட்டியதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்த நிலையில் நத்தம் போலீசாருக்கு இவரின் தந்தை தகவல் அளித்தார்.
"கொசு தொல்லை தாங்க முடியவில்லை" - ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ வேதனை
இதைத்தொடர்ந்து நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை ஈடுபட்ட நிலையில் முன் விரோதம் இருக்கும் அடிப்படையில் ஊரைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி பிரபாகரன் (30) என்ற செல்லம் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, ஜோதியின் தங்கையை திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Rajinikanth Watch ARR Movie: இயக்குநர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ஆர்.. படத்தை கண்டு ரசித்த ரஜினிகாந்த்!
இந்த நிலையில் வேறொரு நபருடன் திருமணம் (டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை)செய்ய முடிவு செய்தததை அறிந்து ஆத்திரம் அடைந்த பிரபாகரன், உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கூறி தனியாக தோட்டத்து வீட்டில் இருந்த ஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஜோதி நீ வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று கூறி திருமணம் செய்து கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார்.
DMK: "பேராசிரியர் நூற்றாண்டு விழா; தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு கூட்டங்கள்" - தி.மு.க. தீர்மானம்
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பிரபாகரன் மறைத்து வைத்த அரிவாளால் ஜோதியை பின்புறமாக தாக்கி வெட்டி கொன்றாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக்!கொலை சம்பவம் நத்தம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்