மதுரையில் விசிக சார்பில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை: திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் வெண்கலச்சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.பி. சு.வெங்கடேசன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை மாவட்ட முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்காக கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் விழா மேடையில் இருந்தவாரு ரிமோட் மூலம் சிலையை திறந்து வைத்தனர். பின்னர் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அம்பேத்கர் முழு உருவ சிலையையும் கல்வெட்டுகளை முதல்வருக்கு திருமாவளவன் காண்பித்தார். பின்னர் முதல்வர் விமானம் மூலம் சென்னை சென்றார். தொடர்ந்து திருமாவளவன் அம்பேத்கரை போற்றும் வீதமாக வீர வணக்கம் செலுத்தினார்.
மதுரை, பெருங்குடியில் (விமான நிலைய நுழைவு வாயில்) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வெண்கல திருவுருவச் சிலையினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். pic.twitter.com/e3iXzMD00E
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2022
இதற்கு முன்னதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான இலட்சினையையும் வெளியிட்டார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்து,
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 9, 2022
1/2 pic.twitter.com/1RpO5J2Fgd
அதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.