தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கோரிக்கை.

கர்நாடகா நீதிமன்றம் மாநில அரசே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இனியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என கூறினால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். உரிமை மீட்க தலைமுறை காக்க என அன்புமணியின் பிரச்சார பயணத்தில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவ வன்னியர் மக்களின் MBC கோரிக்கை குறித்து பாதிரியார்கள், பொதுமக்கள் மற்றும் சமூக தலைவர்களுடன் அன்புமணி (தலைவர்-பாமக) ஆலோசனை செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் அந்த மாநில அரசு நடத்துகின்ற சாதி வாரிய கணக்கெடுப்பிற்கு தடை கிடையாது. நீதிபதிகள் சொன்ன கருத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுக்கும் முழு அதிகாரம் இருக்கிறது. மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவில் சாதி வாரி கணக்கெடுப்பு தாராளமாக நடத்தலாம் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்குப் பிறகும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு கணக்கெடுப்பு நடத்த உரிமை கிடையாது அதிகாரம் இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சரவர்கள் தமிழக அரசு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் இல்லை மத்திய அரசு மட்டும்தான் எடுக்க வேண்டும் என்று பொய்யை சொல்லி வருகிறார்கள். சட்டமன்றத்தில் உள்ளே மற்றும் வெளியையும் இதே பொய்யை கூறுகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் கோரிக்கை விடுத்த பிறகும் சமூகநீதி என்று பேசுகின்ற திமுக அரசு சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய துரோகம் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கர்நாடகா, பீகார் தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சில மாநிலங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாணைப்படி நடத்தப்பட்டுள்ளது. எவ்வளவோ மாநிலங்கள் நடத்தி வருகின்றனர் ஆனால், தமிழ்நாட்டில் மற்றும் நடத்த முடியாது என்று பொய்யை சொல்லுகின்ற முதலமைச்சரை, தற்போது தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த பொய் தற்போது மேலும் பொய்யாகிவிட்டது. நேற்று கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு இனியாவது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் இல்லை என்றால் உங்கள் சாதி பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூகநீதி என பெயர் மாற்றிக் கொள்ளவும் இது அவசியமானது. இது ஒரு சாதி பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்பங்களில் நிலையை கண்டறிய வேண்டும். 1931 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தான் 90 ஆண்டு காலமாக ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். தற்போது எடுக்கின்ற கணக்கெடுப்பு துல்லியமாக தகவல் தொழில்நுட்பத்துடன் எடுக்கலாம். அடுத்த 50 ஆண்டுகள் இந்த கணக்கெடுப்பை பயன்படுத்தலாம். மைக்ரோ லெவல் பிளானிங் செய்யலாம். சமூக நலத்திட்டங்களை கொடுக்கலாம். இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தலாம் நியாயப்படுத்தலாம் அதோடு தமிழ்நாட்டிற்கு மற்றொரு முக்கிய காரணங்கள் இருக்கிறது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை என்று வேண்டுமானாலும் விசாரணைக்கு வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 69 சதவீத விழுக்காடு BC, SC, ST மக்கள் இருக்கின்றார்களா? ஒரு கேள்வி பிரதமரை கேட்டு உள்ளனர் அந்த கேள்வி நியாயப்படுத்த முடியவில்லை கணக்கெடுப்பு வைத்த தான் நியாயப்படுத்த முடியும் கணக்கெடுப்பு நடத்த இரண்டு மாதங்கள் தான் ஆகும் 500 கோடி செலவாகும்.மூன்று லட்சம் அரசு ஊழியர்கள் இரண்டு மாதம் வேலை செய்தால் போதும் துல்லியமாக 70 கேள்விகள் வைத்து கணக்கெடுப்பு வைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கலாம். நலத்திட்டங்கள் கொடுக்கலாம்.சமூகநீதி துல்லியமாக நிலை நாட்டலாம். அதெல்லாம் எனக்கு வேண்டாம் வசனம் மட்டும் தான் நாங்கள் பேசுவோம் தந்தை பெரியார் அண்ணா உடைய கொள்ளு பேரன், கருணாநிதி மகன் என வசனம் தான் பேசுவோம். சமூகநீதி எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
தமிழ்நாட்டின் இன்றைய உயிர்நாடி பிரச்சனை. இது எல்லா சமுதாயத்திற்கும் சார்ந்த பிரச்சினை பட்டியல் இன சமுதாயம்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.பட்டியல் இன சமுதாயத்திற்கு இரண்டு சதவீத அதிக கூடுதல் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.அதில் இல்லாமல் பட்டியல் இனத்தில் 78 உட்பிரிவுகள் உள்ளது. உட்பிரிவுகளில் சில பெயர்களுக்கு தான் கிடைக்கிறது பல பெயர்களுக்கு கிடைப்பதில்லை. யாருக்கும் கிடைக்கவில்லை அதனை கண்டறிவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.எம் பி சி -யில் 115 சமுதாயம் இருக்கிறது. யாருக்கு கிடைக்கிறது. யாருக்கு கிடைக்கவில்லை. என்பது, தெரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பிசியில் 140 சமுதாயம் உள்ளது இதில் அதிக யார் எடுத்து செல்கின்றனர். யாருக்கு கிடைக்கவில்லை என்பது கணக்கெடுப்பு நடத்தினால்தான் தெரியவரும்.இஸ்லாமியர்களுக்கு கூட 3 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. ஏழு உட்பிரிவுகள் உள்ளது யாருக்கு அதிகமாக கிடைக்கிறது. யாருக்கு கிடைக்கவில்லை. இந்த அடிப்படை கூட தெரிந்து கொள்ள மாட்டேன். இதை தெரிந்து கொள்ள எனக்கு மனமில்லை. என்று உள்ளார் முதலமைச்சர் திமுகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இருவரும் சமூக நீதிக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் வகை இதனை பார்க்கிறேன். தமிழ்நாடு மக்கள் இதனை மன்னிக்க மாட்டார்கள். கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்ற விழா நடத்தி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர்.கல்வி பாதாளத்தில் இருக்கிறது. அதற்கு உதாரணம் 37500 அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. 12500 தனியார் பள்ளிக்கூடங்கள் இருக்கிறது. 37,500 அரசு பள்ளிக்கூடத்தில் 52 லட்சம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். வெறும் 12,500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். 3:1 சதவீதம் இருக்கின்ற தனியார் பள்ளிகளில் அதிகமானவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் கல்வியின் நிலையா?
207 பள்ளிக்கூடத்தை மூடியுள்ளனர். 4000 தொடக்கப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரு லட்சம் வகுப்பறையில் ஆசிரியர்கள் கிடையாது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறியது என்னவென்றால் பள்ளி நிதியை மூன்று மடங்கு அதிகப்படுத்துவோம். உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அதிகப்படுத்துவோம் என தெரிவித்தனர். அப்படி என்றால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் கல்விக்கு என்று. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்த 2020 - 2021 ஆண்டில் 34,000 கோடி கல்விக்கு என நிதி ஒதுக்கினார்கள். திமுக ஆட்சி நாளரை ஆண்டுகள் ஆகிறது ஆனால் 46,000 கோடியே ஒதுக்கியுள்ளனர். வெறும் 12000 கோடியே அதிக படுத்தி உள்ளனர். தேர்தல் அறிக்கையில் மூன்று மடங்கு அதிகப்படுத்துவோம் என தெரிவித்தனர். 180 அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றது 100 கல்லூரிகளில் முதல்வர் கிடையாது. பத்தாயிரம் உதவி பேராசிரியர் பதவி இடம் காலியாக உள்ளது. அனைத்துமே தற்காலிக ஊழியர்கள் என நியமிக்கின்றனர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி போட்டுக்கொண்டு மாணவர்கள் சேர்வார்கள் ஆனால் இந்த ஆண்டு 34,000 மாணவர்கள் சேரவில்லை. ஒரு லட்சத்து 30000 வரவேண்டிய இடத்தில் 96 ஆயிரம் விண்ணப்பங்கள் தான் வந்துள்ளது. ஆசிரியர்கள் முதல்வர் கிடையாது என்பதால் யாரும் சேர முன்வரவில்லை. பள்ளிக்கு நிதி கிடையாது. கல்விக்கு சிறந்தது தமிழ்நாடு என நாடகம் நடித்துக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.நீண்ட நாட்களாக நம்மளுடைய கோரிக்கை கிறிஸ்துவ வன்னியர்களை எம்.பி.சி பட்டியலில் கொண்டு வர வேண்டும் என நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு பாட்டாளி மக்கள் கட்சி முன்பு இருந்தே ஆதரவு அளித்து வருகிறது.அரசியல் சாசனத்தில் மதத்தை வைத்து இட ஒதுக்கீடு என்ற வார்த்தை கிடையாது. கல்வி மற்றும் சமூகப் பின் தங்கிய நிலை இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு நலத்திட்டங்கள் வழங்கிட வேண்டும்.

அதில் மதம் என்ற வார்த்தை இல்லை.வன்னியர்கள் மட்டுமில்லாமல் பட்டியல் இனத்தை சார்ந்தவர்களும் கிறிஸ்தவராக மாறினால் அவருக்கும் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. பட்டியல் இனத்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினால் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவது இல்லை.கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல் இருக்கு வந்து வாக்குறுதி கொடுத்திருந்தார்.ஆட்சிக்கு வந்தவுடன் வன்னிய கிறிஸ்தவர்களை எம் பி சி பட்டியில் இருக்கு சேர்ப்போம் என்று நான்கரை ஆண்டு ஆகிறது இது சம்பந்தமாக எந்த முயற்சியும் எடுத்து வைக்கவில்லை.திமுகவின் அவல நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என திமுக வாக்குறுதி கொடுத்தது.கடந்தாண்டு 85 லட்சம் பேர் பதிவு செய்து 75 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து வந்தார்கள். தற்போது 45 லட்சம் நபர்களுக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். மொத்தமாக கணக்கெடுத்து பார்த்தால் 9.5 நாட்கள் மட்டுமே கணக்கு வருகிறது.பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக ஒவ்வொன்றாக என்னால் நிரூபிக்க முடியும்.இதுகுறித்து புத்தகமும் வெளியிட்டுள்ளேன்.மக்கள் நிச்சயமாக இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்ன பொய் சொன்னாலும் அது எடுபட போவது கிடையாது. இதை மக்களுக்கு சொல்வதற்காகவே நான் வந்துள்ளேன். இது சாதிப்பிரச்சனை மத பிரச்சனை கிடையாது சமூகநீதி பிரச்சனை. இதற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் உடனிருந்து போராடுவோம்" என தெரிவித்தார்.





















