மேலும் அறிய

கொச்சின் நோக்கி சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து.. விபத்து நடந்தது எப்படி?

தென்மேற்குப் பருவமழையின் காரணமாகக் கடலில் ஏற்பட்ட பாதகமான சூழலே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டின் கொடியுடன் கூடிய ஒரு சரக்குக் கப்பல், அரபிக் கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பல் நேற்றிரவு 10 மணியளவில் கொச்சியை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தபோது கப்பலில் 24 பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளை அணிந்து உயிர் தப்பியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கொச்சின் நோக்கி சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து.. விபத்து நடந்தது எப்படி?

லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. நேற்று (சனிக்கிழமை) கொச்சி துறைமுகத்துக்கு அந்த கப்பல் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நேற்று மதியம் 1.25 மணியளவில் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.விபத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.

கப்பல் விபத்தில் சிக்கியது குறித்து கோஸ்ட் காட் மற்றும் கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படையின் ஒரு கப்பல் மற்றும் கோஸ்ட் காட்-க்கு சொந்தமான 2 கப்பல்களும் விபத்துக்குள்ளான கப்பல் அருகில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்கள் கடலில் மிதக்கின்றன

மேலும், சிறிய ட்ரோன்கள் மூலம் விபத்துக்குள்ளான கப்பலின் மேல் பகுதி கண்காணிக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 ஊழியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 9 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து தப்பினர்.மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையான கோஸ்ட் காட் மற்றும் இந்திய கப்பற்படை ஆகியன களமிறங்கியுள்ளன. கடலில் குதித்த 9 பேர் உள்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 3 பேரும் கப்பலில் பாதுகாப்பாக இருப்பதாகவும். அவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சின் நோக்கி சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து.. விபத்து நடந்தது எப்படி?

கடலில் வீழ்ந்துள்ள கண்டெய்மர்களை கண்டால் அதன் அருகில் செல்லவோ, திறக்கவோ கூடாது என பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்துள்ளது.கடலில் செல்லும் மீனவர்களோ, அல்லது கரை ஒதுங்கும் கண்டெய்னர்களை பொதுமக்கள் கண்டாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 112 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும். கண்டெய்னர்களை திறக்க முற்படக்கூடாது. அவற்றை திறந்தால் உயிருக்கு ஆபத்தாகும் எனவும் பேரிடர் மேலாண்மை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்குப் பருவமழையின் காரணமாகக் கடலில் ஏற்பட்ட பாதகமான சூழலே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து இந்திய கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய கடலோர காவல்படையின் (ICG) கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கப்பல் சாய்ந்திருப்பதால் சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கப்பலின் நிலைத்தன்மையை பராமரிக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget