Assembly : எல்லா பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க பெண்களை அனுமதிக்கணும் - பேரவையில் பேசிய செல்லூர் ராஜு
எல்லா பேருந்துகளிலும் இலவசமாக அனுமதிக்கப்பட்டால் எப்படி போக்குவரத்துறையை நடத்துவது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
![Assembly : எல்லா பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க பெண்களை அனுமதிக்கணும் - பேரவையில் பேசிய செல்லூர் ராஜு Cant afford Free transportation for all the buses to woman already transport department in loss says Minister rajakannappan to sellur Raju Assembly : எல்லா பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்க பெண்களை அனுமதிக்கணும் - பேரவையில் பேசிய செல்லூர் ராஜு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/7681c6d19e04dc58ab3fe1d8d5f9f301_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது நாளாக, பட்ஜெட் மீதான விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்வி, பதில் நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகளிர் இலவச பேருந்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு பேருந்துகள் மட்டுமல்லாமல் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் ஏற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவுத்திட்டம் என்றும், அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்க முடியாது என்றும், போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் கூறினார்.
எல்லா பேருந்துகளிலும் இலவசமாக அனுமதிக்கப்பட்டால் எப்படி போக்குவரத்துறையை நடத்துவது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
”மக்கள் சந்தோஷமாதான் இருக்காங்க. நம்முடைய ராஜுதான் சந்தோஷமா இல்லைன்னு நினைக்கேன்” என்று சபாநாயகர் கூறியதை அடுத்து, செல்லூர் ராஜுவை அமைச்சருக்கு, ராஜ கண்ணப்பன் பதிலை அளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)