உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு பக்கபலம்.. 24 லட்சம் நிதியுதவி.. உசிலம்பட்டியில் நெகிழ்ச்சி..
மதுரை உசிலம்பட்டி அருகே உயிரழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் சக காவலர்கள் ஒன்றிணைந்து சுமார் 24 லட்சம் நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”காவல்துறை உங்கள் நண்பன்” - என்ற வாக்கியத்தை உண்மையாக்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த பலரும் நற்பெயர்கள் எடுத்துள்ளனர். ஒரு சில காவல்துறை ஊழியர்கள் செய்யும் செயலால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் கெட்ட பெயரை உருவாக்குகிறது. பல்வேறு விமர்சனங்கள் காவல்துறையினர் மீது இருந்தாலும் பொதுமக்களின் உதவிக்கும், பாதுகாப்பிற்கு காவல்துறையினர் தான் உயிர்நாடி. இந்நிலையில் காவல்துறையில் பணியாற்றிய நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு காவலர்கள் இணைந்து பண உதவி செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உயிரழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் சக காவலர்கள் ஒன்றிணைந்து சுமார் 24 லட்சம் நிதியை வழங்கி ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.#madurai | #usilampatti | #Police
— Arunchinna (@iamarunchinna) August 7, 2022
| #help @tnpoliceoffl@AgencyTamil @Ns7Senthil143 pic.twitter.com/DBq3ywewvu
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்