மேலும் அறிய
Advertisement
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB CRP XIII Result 2024: அரசு வங்கிப் பணியாளர் தேர்வாணையம் (IBPS) கிராமப்புற வங்கிகளுக்கான அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான (RRB CRP XIII) 2024 முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் முடிவுகளை அறிவித்துள்ளது. இதன்படி, அதிகாரி நிலை 1, 2, 3 மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வை எழுதிவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்தவர்கள், ibps.in என்னும் இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். இதில் இறுதி கட்- ஆஃப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
எதற்காக இந்தத் தேர்வு
பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (Rural Regional Banks) காலியாக உள்ள 5,585 பல்வேறு வகைகளிலான அலுவலக உதவியாளர் பணியிடங்கள் உள்ளிட்ட, 9995 காலி இடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி? ( How To Download IBPS RRB Result 2024?)
- தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டே IBPS RRB CRP XIII 2024 மதிப்பெண் அட்டைகளைப் பெற முடியும்.
- முதலில் இதற்கு ibps.in என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- முகப்புப் பக்கத்தில் தோன்றும் ‘Result for CRP RRBs-XIII (Provisional Allotment)" என்ற இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்துத் தோன்று பக்கத்தில் scale 1, scale 2, scale 3 மற்றும் office assistant ஆகிய பதவிகளுக்குத் தனித்தனியாகத் தேர்வு முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.
- அல்லது https://www.ibps.in/index.php/rural-bank-xiii/ என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
- ஜனவரி 31ஆம் தேதி வரை தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு: ibps.in
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion