மேலும் அறிய
Advertisement
”ஜி.எஸ்.டி விஷயத்தில் பி.டி.ஆர், அறிவு ஜீவிபோல பேசுகிறார்” : செல்லூர் ராஜூ காட்டம்..
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கான கமிஷன் தொகை கிடைக்காததால் , பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு.
மதுரையில் தி.மு.க.., பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் இருந்து பல்வேறு நபர்கள் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவிக்கையில்,”தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கான கமிஷன் தொகை கிடைக்காததால் , பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளார். நீதித்துறை மற்றும் வணிகவரித்துறை ஆகிய இரண்டு அமைச்சர்களும் மதுரையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். முக்கிய துறையில் செயல்படும் இவர்கள் ஏன் திட்டங்களை கொண்டுவரவில்லை. கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் ஆறு முறை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம். அப்போது கேரள அரசு எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. இலவச பஸ் பேருந்தில் 8 கோடி பேர் பயன்பட்டதாக சொல்கின்றனர் அதனை எப்படி கணக்கு செய்தார்கள்? டிக்கெட்டும் இல்லை, டோக்கனும் இல்லை பின்னர் எப்படி அதிகாரிகள் புள்ளி விபரங்களை கொடுக்கின்றனர். மின் கட்டணம், வீட்டு வரி உள்ளிட்ட பலவற்றில் கட்டணங்களை தி.மு.க., அரசு உயர்த்தியுள்ளனர்.
அண்டை மாநிலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கொடுக்கும் நெருக்கடியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமாளிக்க முடியவில்லை. ரூல்கரவ் திட்டத்தின் மூலம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., தனது தேர்தல் வாக்குறிதியை நிறைவேற்றாததால் அக்கட்சியினரே திமுகவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் தற்போது இணைந்துள்ளனர்”
ஒன்றிய பிரதமர் என கூறி வந்த தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமர் என கூறி வரவேற்கின்றார். ஏன் இந்த முறை நரேந்திர மோடி அவர்களை ஒன்றிய பிரதமர் என அழைக்கவில்லை என கேள்வி ?
வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பயந்து தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமரை வரவேற்பு அளிக்கின்றார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அ.தி.மு.க.,வில் இணைவது குறித்த கேள்விக்கு..
அ.தி.மு.க.,வின் கொள்கை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினருக்கு பிடித்ததால் எங்களது கட்சியில் இணைவதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion