குளிக்க ஆளில்லை... கொட்டோ கொட்டுனு கொட்டுது சுருளி அருவி!
வெறும் பாறையாக இருந்த போது சுற்றுலா பயணிகள் பார்ந்தனர். இப்போது அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஊரடங்கால் அதை காண பயணிகள் வர முடியாத நிலை.
தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் அருகே 15 கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுலாத்தளமாக அமைந்துள்ளது சுருளி அருவி . பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் இந்த அருவியில், ஆனந்த குளியடும்போது போது வரும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பார்கள் அருவிக்கு சென்று திரும்புபவர்கள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் 40 அடி உயரம் கொண்ட இந்த அருவி வனப்பகுதியிகளிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அருவியாக உருவெடுத்துள்ளது .
இந்த அருவி அமைந்துள்ள இடமானது சுற்றுலாத்தலமாக மட்டுமல்லாமல் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது. காரணம் இந்த அருவிக்கு செல்லும் நுழைவுவாயிலில் பிரசித்திபெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் இத்தளத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தற்போதும் வாழ்ந்து வருவதாகவும் ஐதீகம் ஆதலால் இறந்த முன்னோர்களுக்கு திதி தற்பணம் போன்ற ஈமச் சடங்குகளை செய்வதற்கு இங்கு கூடும் கூட்டத்திற்கு அளவே இல்லை என்றும் குறிப்பிடலாம். ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமி நாளன்று இறந்த முன்னோர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கு உள்ளூர் வெளியூர் அல்ல வெளி மாவட்டங்கள் ,வெளிமாநிலங்களில் இருந்து கூட ஏராளமான மக்கள் இங்கு வருவது வழக்கம் அப்படி செய்யப்படும் ஈமச் சடங்குகளின் போது இந்த அருவியில் குளித்து விட்ட பின்னரே வீடு திரும்ப வேண்டும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆதலால் இந்த சுருளி அருவியை சுருளி தீர்த்தம் எனவும் அழைக்கப்படுவது வழக்கம், தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்கின்றனர் வனத்துறையினர். ஆன்மிக ஸ்தலம் என அழைக்கப்படும் இந்த அருவி செல்லும் பகுதிகளில் எல்லாம் பழமையான கோவில்கள் சித்தர்கள் வாழ்ந்த இடங்களாக குறிப்பிடப்படும் இடங்கள் என பல்வேறு ஆன்மீக சம்பந்தப்பட்ட இடங்கள் இருப்பதால் பெரும்பாலும் ஆன்மிகவாதிகள் இப்பகுதியில் அதிகமாக தற்போதும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி பல்வேறு புகழும் சிறப்புகளும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் வனப்பகுதிகளில் பல மாதங்களாக போதிய மழையின்மையால் அருவியில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளுடன் காட்சியளித்தது,
சுமார் ஓராண்டுக்கு பிறகு தற்போது கடந்த சில நாட்களாக அருவிக்கு நீர் வரத்து வரும் மேகமலை, இரவங்கலாறு, மகாராஜா மெட்டு உள்ளிட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக நீண்ட மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காண முடிகிறது. சென்ற மாதங்களில் ஊரடங்கு விதிகளின் போது அருவியைப் பார்ப்பதற்கு மட்டுமே அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளித்திருந்தது வனத்துறை,
ஆனால் அப்போதெல்லாம் நீர் வரத்து இன்றி வெறும் பாறைகள் மட்டுமே காட்சியளித்த அருவி , தற்போது கண்களை கவரும் அளவிற்கு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிவருவதன் எதிரொலியாக ஊரடங்கு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதே நிலைதான் இந்த சுற்றுலா தளத்திற்கும் நீண்ட மாத இடைவெளிக்குப் பிறகு அருவியில் கொட்டும் நீரை காண்பதற்கும் ஆளில்லை அருவியை கண்டுவிட்டு அதில் ஆனந்த குளியலிடாமல் செல்ல விரும்பாதவர்கள் தற்போது யாரும் இல்லை என அருவி வெறிச்சோடி காணப்படுகிறது.