தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையை கண்டித்து அதிமுக தொண்டர்கள் இரு முன்னாள் அமைச்சர்களின் இல்லத்தின் முன்பாக திரண்டனர்.
வேல்ஸ் மருத்துவகல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு - தேனி மருத்துவகல்லூரி முதல்வரின் மதுரையில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
— arunchinna (@arunreporter92) September 13, 2022
Further details for follow - @abpnadu@SRajaJourno | @LPRABHAKARANPR3 | @Kishoreamutha pic.twitter.com/5RlGYfsyP6
அத்துடன் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு முன்பாக 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் திரும்பி செல்ல வலியுறுத்தினர். எனினும் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன்காரணமாக காவல்துறையினர் அமல் கந்தசாமி, அம்மன் அர்ச்சுனன், செ.தமோதரன், கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் ஆகிய 6 எம்.எல்.ஏக்களை கைது செய்துள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை!https://t.co/wupaoCzH82 | #SPVelumani #CVijayabaskar #DVACRaid #ADMK #abp #abpnews #abpnadu pic.twitter.com/EFwwCYydxT
— ABP Nadu (@abpnadu) September 13, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்