மேலும் அறிய
”ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆண்டிமுத்து ராசா இன்று ஆ.ராசாவாக மாறிவிட்டார்” - செல்லூர் ராஜூ
ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆண்டிமுத்து ராசா இன்று ஆ.ராசாவாக மாறிவிட்டார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேச்சு.
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி T.M. கோர்ட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,"ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது, அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த மு.க. ஸ்டாலின் ஜோசியத்தை பார்த்து அ.தி.மு.க., ஆட்சி 3 மாத காலங்களில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். தி.மு.க., ஆட்சியில் விடியல் தருகிறேன், என்று கூறி இருட்டை கொடுத்துவிட்டார் நமக்கு விடியவே இல்லை.
சட்டை கிழிந்து போனால் ஒட்டு போட்டு தைப்பார்கள் அது போல தான் மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது சாலை அமைக்காமல் சாலையின் மேல் Batch Road போட்டார்கள், தமிழகத்திற்கே நிதி கொடுக்கும் நிதிமையமைசர் மதுரைக்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை, திமுக திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள், கரண்ட் கொடுக்கவும் வக்கில்லை, மின்சார கட்டணம் உயர்த்த வெக்கமில்லை, அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் ஈ கிட்டந்திருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் திமுகவினர் குதித்திருப்பார்கள், பெற்றை தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவை மதிக்கலாமா?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் ஆவின் பால்பாக்கெட்டில் இருந்த ‘ஈ’ - வீடியோ தொடர்பாக அதிகாரி சஸ்பெண்ட்
குங்குமம் வைத்தவகள் விபச்சாரியின் பிள்ளைகள் என ஆ.ராசா கூறினார், ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு இன்று ஆண்டிமுத்து ராசா இன்று ஆ. ராசாவாக மாறிவிட்டார், வருகிற 29 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion