சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம் - மதுரையில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழகத்தில் பழனி உள்ளிட்ட 4 கோவில்களுக்கு ரோப்கார் அமைக்கப்பட்வுள்ளது - இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், மேயர் இந்திராணி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேகர்பாபு..,” மதுரை கள்ளழகர், மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வில் போது அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள், திருக்கல்யாண நிகழ்விற்கு 12ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
ஆசியாவில் மிக முக்கியமான திருவிழாவில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் துவங்கியுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அமைச்சர் @PKSekarbabu ஆய்வு செய்தார்.@SRajaJourno | @pmoorthy21 | @mducollector #madurai pic.twitter.com/utKRJjra6S
— arunchinna (@arunreporter92) April 26, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்