தனக்கு முதல் பரிசு அறிவிக்க வேண்டும்; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2வது இடம் பிடித்த அபி சித்தர் வழக்கு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை ஜல்லிக்கட்டு
தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே. மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு கூடுதல் விருந்தாக கீழக்கரை பிரமாண்ட மைதானத்திலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடித்த அபி சித்தர் தனக்கு முதல் பரிசு அறிவிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.