மேலும் அறிய

மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !

'’இப்பொழுது அமையவிருக்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்கு செய்ய நினைக்கிறது. துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்’’

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி  சட்டப்பேரவையில் பேசிய செல்லூர் ராஜூ மதுரை பென்னிகுயிக் நினைவிடத்தினை அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைய இருப்பதாக பேசினார். 
 
மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !
 
இதற்கு பதில் கருத்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின் "தாங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். கண்டிப்பாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரச்சாரத்தினை முன்னெடுக்கிறீர்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாக கூடாது என்பதற்காகத் தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன்" என பதில் அளித்தார்.

மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !
இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அ.தி.மு.கவிற்கு எதிராக காட்டமாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மூன்றாண்டுக்கு முன் 6 கோடியில் மதுரையில் நூலகம் அமைப்போம் என்று அறிவித்து அதனை நிறைவேற்றாமல் துரோகம் செய்த அ.தி.மு.க, இப்பொழுதோ அமையவிருக்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்கு செய்கிறது. துரோகத்தை வீழ்த்தி நூலகம் அமைய மதுரை மக்கள் துணை நிற்பர்" என்று தெரிவித்துள்ளார்.
 
 
மேலும் அவர் வெளியிட்ட முழு அறிக்கையில் "மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இடம் . எனவே அந்த கட்டிடத்தை இடிக்கவோ. மாற்றவோ கூடாது என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழக சட்டமன்றத்திலும் இதே கருத்தை அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்லூர் ராஜூ அவர்கள் பேசினார். அப்பொழுது குறுக்கிட்டு பேசிய தமிழக முதல்வர் “அந்த கட்டிடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரங்களை காட்டுங்கள். நாங்கள் அதனை பரிசீலிக்கிறோம். அதை விடுத்து ஆதாரமில்லாமல் தவறான பிரச்சாரத்தை செய்யாதீர்கள்" என்று கூறினார்.

மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !
 
இப்பொழுது வரை செல்லூர் ராஜூவோ அவரது கட்சியோ எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவர்களால் எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியாது. ஏனென்றால் அதில் துளியும் உண்மையில்லை. பென்னிகுயிக்கின் வாழ்வையும், முல்லை பெரியாறு அணை உருவான விதத்தையும் பற்றி விரிவான ஆய்வினை மேற்கொண்டு, அதனை நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் எழுதியுள்ள எழுத்தாளன் என்ற முறையில் இரண்டு கருத்துகளை பதிவு செய்கிறேன்.

மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !
 
1. கர்னல் பென்னிகுயிக் மதுரையில் வாழ்ந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இதுவரை எந்த ஒரு ஆய்வாளராலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படி பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த நூலையோ, ஆவணத்தையோ அதிமுக வெளியிட வேண்டும்.
 
2.1895 ஆம் ஆண்டு அணை கட்டும் பணி முடிவுற்ற அடுத்த ஆண்டே பென்னிகுயிக் பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்புகிறார். மனைவி மற்றும் ஐந்து பெண் குழந்தைகளுடன் இங்கிலாந்து திரும்பும் அவருக்கு சென்னை கிரிக்கெட் கிளப்பின் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டு வழியனுப்பப்படுகிறது. ஏனென்றால் பென்னிகுயிக் சென்னை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர்.

மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !
 
1896 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசிக்கத்துவங்கிய பென்னிகுயிக் ராயல் இந்தியன் பொறியியல் கல்லூரியின் தலைவராகிறார். மூன்றாண்டுகளுக்குப் பின் அந்தப் பதவியை ராஜினாமா செய்கிறார். பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கை கையாள்வதற்கான ஆலோசனை பெறுவதற்காக அழைக்கப்படுகிறார். ஆஸ்திரேலியா சென்று மீண்டும் இங்கிலாந்து திரும்பும் அவர் 1911 ஆம் ஆண்டு கேம்பெர்லி நகரில் மரணமடைகிறார். இதுவே அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள். அவர் இந்தியாவை விட்டு வெளியேறி 17 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1913 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் அவர் வசித்தார் என்று சொல்லுவது ஏதாவது பொருத்தப்பாடு உடையதா? கற்பனைக்கும் எட்டாத பொய் அல்லவா? இடர்மிகு சூழலில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்து லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாமனிதனாகப் போற்றப்படும் பென்னிகுயிக் அவர்களின் புகழை குறுகிய அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்துவது என்ன நியாயம்?

மதுரையில் அமையும் நூலகத்தை தடுக்க வேண்டாம்-செல்லூர் ராஜூக்கு எதிராக சு.வெங்கடேசன் காட்டம் !
 
மதுரைக்கும், தென் தமிழகத்து மாணவர்களுக்கும் மிகப்பெரும் பயன்பாட்டினை அளிக்கும் நூலகத்தை பொய்யைச்சொல்லி தடுக்க நினைப்பது என்ன வகை அரசியல்? மூன்று ஆண்டுகளுக்கு முன் சட்ட மன்றத்தில் அதிமுக அரசு கல்வி மானியக் கோரிக்கையின் போது மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க கட்டிடத்தில் 6 கோடி ரூபாய் செலவில் மாபெரும் நூலகம் அமைப்போம் என்று அறிவித்தது. ஆனால் அந்த அறிவிப்பு காற்றோடு போயிற்று. எந்த நடவடிக்கையும் அதிமுக அரசு எடுக்கவில்லை. ஆனால் இன்றோ 80 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்த கையோடு அதனை நடைமுறைப்படுத்த துரிதமான ஆய்வினை பல முறை மேற்கொண்டு இடத்தை தேர்வு செய்துள்ளது தமிழக அரசு. அன்று நூலகத்தை அமைக்காமல் மதுரைக்கு துரோகம் செய்த அதிமுக, இப்பொழுது அமையவிருக்கும் நூலகத்தை தடுக்க முயற்சிப்பதன் மூலம் மீண்டும் ஒரு துரோகத்தை மதுரைக்கு செய்ய நினைக்கிறது. துரோகத்தை வீழ்த்தி நூலகத்தை அமைக்க மதுரை மக்கள் துணை நிற்பார்கள்”. என பதிவு செய்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget