மேலும் அறிய

Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு

தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது. - இ.பி.எஸ்., பேட்டி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: எழுச்சி மாநாட்டில் மிகப்பெரிய ஒத்துழைப்பு வழங்கினீர்கள். அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற சேர்த்ததற்கு நன்றி. மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் மற்றும் அருள்மிகு சுந்தரேஸ்வரர் சாமியை தரிசனம் செய்துவிட்டு உங்களை சந்திக்கிறேன்.

Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு
 
கோடநாடு கொலை வழக்கு குறித்த கேள்விக்கு
 
சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போது ஏன் முதல்வர் அமைதியாக இருந்தார். அ.தி.மு.க., ஆட்சியின் போது நடைபெற்றதை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார்கள். வேண்டுமென்றே அவதூறு செய்தியை பரப்புகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை நான் சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். குற்றவாளியை கைது செய்தது அ.தி.மு.க., தான், வழக்கு நடைபெற்றதும் எங்கள் ஆட்சியின் போது தான். குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்காக இருந்தது தி.மு.க., வழக்கறிஞர். குற்றவாளிகளுக்கு ஜாமீன் தருவதாக இருந்தது தி.மு.க.,வினர் மீதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த குற்றவாளிகள் ஏற்கனவே கேரளாவில் கொடும் குற்றம் புரிந்தவர்கள். அந்த வழக்கு நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு ஏன் தி.மு.க.,வினர் ஜாமீன் வாங்க வேண்டும். கொரோனாவால் தான் காலதாமதம் ஆனது. வழக்கு 90% முடிந்ததாக தகவல். வேற வழி இல்லாமல் எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இதை அடிக்கடி வெளியிடுகிறார்கள். நாங்கள் பதறவில்லை. ஜாமீன் தர ஏன் விசாரிக்கவில்லை. 

Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு
 
காவிரி விவகாரம் குறித்த கேள்விக்கு
 
உச்சநீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை நாங்கள் பெற்றோம். மாதம் குறிப்பிட்ட டி.என்.சி., திறக்க வேண்டும் என்ற உத்தரவைப் பெற்றது அ.தி.மு.க., அரசு. விவசாயிகளுக்காக 22 நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.  இந்தியா என்கிற கூட்டணியின் நோக்கம் என்ன. தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை இந்தியாவை காப்பாற்றுகிறார். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை கேட்டு வாங்குவதற்கு முதல்வர் தயங்குகிறார். அதிமுக எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமை கிடையாது திமுக தான் அடிமையாக இருக்கும். திமுகவில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரவேண்டும், மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களுக்காக விவசாயிகளுக்காக நீரை பெற்றுக் கொண்டிருந்தால் மக்கள் பாராட்டு இருப்பார்கள். முதல்வர் நானும் டெல்டாகாரன் என்று கூறினார் வீர வசனம் கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால் நெற் பயிரு கருகியதற்கு என்ன தீர்வு கண்டீர்கள்.

Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு
 
பா.ஜ.க., அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு
 
பா.ஜ.க., தீண்ட தகாத கட்சியா 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றார்கள். சுயநினைவு இல்லாத போது முரசொலி மாறன் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தார். அரசியலில் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் பிரச்னைகள் வரும்போது உரிமையை நிலைநாட்டினோம். என் மீது கூட 4800 கோடி வேலை நின்று வழக்கு உள்ளது உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தீர்ப்பை பெற்றேன். திமுகவைப் போல நெஞ்சுவலி என்று நான் போய் படுக்கவில்லை. திமுகவினர் மீது 15 ஆண்டுகாலம் விசாரிக்காத வழக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக வழக்கறிஞர் இந்த வழக்கை எடுத்து நடத்தி விடுதலை பெற்றார்கள்.

Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு
 
சட்டமன்றத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் உள்ளது என்று சொல்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு வந்த பிறகு ஒரு பேச்சு. 2010ல் காங்கிரஸ் கட்சியின் போது தான் நீட் அரக்கன் கொண்டுவரப்பட்டது.  2021 இல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 27 மாதம் ஆகிவிட்டது. மக்களிடம் எதிர்ப்பு வந்த காரணத்தால் வழங்குவோம் என்று கூறுகிறார்கள். மின் கட்டணத்தை திமுக அரசை குறைக்க சொல்லுங்கள். பத்திரப்பதிவை உயர்த்தி உள்ளார்கள். விலைவாசி 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget