Madurai: முடிந்தது தேவர் ஜெயந்தி: மீண்டும் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்ட தேவர் தங்க கவசம்!
தேவர் கவசத்தை மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்.
பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார். அது மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின்போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம். ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட காரணத்தால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் இருந்து எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேவர் கவசத்தை மீண்டும் வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்படைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும், 61 வது குருபூஜை முன்னிட்டும், கடந்த 25ஆம் தேதி தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக அந்த தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்க கவசம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்துட்டு வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் , மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட கழக செயளாலர் எம்.ஏ.முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர். ராஜாங்கம், தமிழரசன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன்,வெற்றிவேல், வழக்கறிஞர்கள் கன்னித்தேவன், வழக்கறிஞர்கள் தமிழ்செல்வன, திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு