மேலும் அறிய

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!

’இளைய தளபதி பிறந்தநாளை போஸ்டர் மற்றும் பேனர் வழியாக மட்டும் கொண்டாடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக செய்கிறோம்”. என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோக்களில் இளைய தளபது விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. நடிப்பு, ஸ்டெயில், நடனம் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளங்களை கட்டிப் போட்டுள்ளார். திரை உலகில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து சாதனைகள் பல செய்துள்ளார். இப்படியான மாஸ் ஹீரோ விஜய் இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் விஜயின் பிறந்தநாளை வெளி மாநிலங்களிலும் கொண்டாடி வருகின்றனர்.
 

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!
மதுரையில் விஜயின் போஸ்டர்கள் தனித்துவம் பெறும். வெறும் போஸ்டராக இல்லாமல் அதில் அரசியலும் கலந்திருக்கும். ஜெயலலிதா, கலைஞர் மறைவிற்கு பின் விஜய் மிகப்பெரும் மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் ஆசை தட்டிப்போகிறது. ஆனாலும் தங்களது போஸ்டரின் வாயிலாக ரசிகர்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது விஜய் ரசிகர்கள் போஸ்டர், பேனர்களில் செலுத்தும் கவனத்தை விட ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை மேலோங்கி முன்னெடுத்து வருவது பாராட்டைப் பெற்றுள்ளது.
 

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் ரசிகரான தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த நாகராஜன் தமிழ் தனது திருமணத்தை முன்னிட்டு  துணைவியார் பாண்டி மீனா மற்றும் விஜய் ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தனது பெற்றோர் மற்றும் பெண் வீட்டார் ஆதரவோடு  நலத்திட்ட உதவிகளை வழங்கியது பெரும் பாரட்டுக்களை பெற்றது. இந்த தம்பதியின் திருமணம் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற நிலையில், அந்தப்பகுதியில் சாலையோரத்தில் வசிக்க கூடிய  சாட்டையடித்து நாடோடிகளாய் வாழும்  குடும்பங்களை சேர்ந்த ஆதரவற்ற  மக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள்,  பழங்கள், உணவு ஆகியவை அடங்கிய பொருட்களை வழங்கினார்.
 

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!
 
மாலையும் கழுத்துமாக திருமணம் முடித்த கையோடு மணக்கோலத்தில் இளம் ஜோடிகள் ஆதரவற்ற பொதுமக்களுக்கு உதவியிருக்கும் இச்செயல் பல தரப்பினரின் பாராட்டை பெற்றது. முன்னதாக அந்தப் பகுதிக்கு நிவாரணப்பொருள் வழங்க வந்த மணப்பெண் மற்றும் மணமகனை ஆரத்தி எடுத்து மேளத்துடன் நடனமாடி அம்மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
 

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!
 
இந்நிலையில் போஸ்டர்களை புறக்கணித்து பல்வேறு எழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிவரும் விஜய் மன்ற இளைஞர் அணியை சேர்ந்த சுக்காம்பட்டி தினகரன், “கோடான கோடி ரசிகர்களின் இதயங்களில் குடியிருக்கும் இளைய தளபதி விஜய் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஆண்டுதோறும் போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறோம். தற்போது தளபதியின் போஸ்டர்கள் அரசியல் சார்ந்த போஸ்டர்களாக மாற்றப்படுகிறது. அவரின் செயல்பாடு தமிழகத்தில் முக்கியத்துவமாக அமையும். இன்று அவரின் பிறந்தநாளை போஸ்டர் மற்றும் பேனர் வழியாக மட்டும் கொண்டாடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக செய்கிறோம். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு எங்களின் செயல்பாடுகளை மாற்றியுள்ளோம். எங்களைப் போல பிற நண்பர்களும் செயல்பட வேண்டும் என விரும்புகிறோம்.
 

”இந்த வருஷம் போஸ்டர் அடிக்கல, உதவி செஞ்சோம்” : நெகிழும் விஜய் ரசிகர்கள்..!
 
மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு மளிகை பொருட்களும், காய்கறி தொகுப்பு வழங்கியுள்ளோம். மாவட்ட தலைவர் விஜய் அன்பர் கல்லாணையுடன் இணைந்து பல இடங்களில் சேவைசெய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. ரத்த தான முகாம், தினமும் ஆதரவற்றவர்களுக்கு உணவு, கல்வி உதவி என்று எங்களின் கரம் தொடர்ந்து நீளும்” என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்:
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
மதுரை மாட்டுத்தாவணி: பயணிகள் அவதி... எம்எல்ஏ அதிரடி ஆய்வு, யார் கேள்வி கேட்பது?
மதுரை மாட்டுத்தாவணி: பயணிகள் அவதி... எம்எல்ஏ அதிரடி ஆய்வு, யார் கேள்வி கேட்பது?
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
உயர்நீதிமன்ற உத்தரவு: விருதுநகரில் சீமைக் கருவேல அகற்றும் பணிகளை நீதிபதி செல்வம் ஆய்வு!
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!
Madurai Power Shutdown (30.07.2026) : மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை : உங்கள் ஊரில் கரண்ட் இருக்கா? தெரிந்து கொள்ளுங்கள்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget