நடிகர் செந்தில் & தனுஷ்: தேனியில் கோயில்களில் குவிந்த பிரபலங்கள்! ரகசிய வழிபாடு, கொண்டாட்டம்!
நடிகர் தனுஷ் போடி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கிடா வெட்டி விருந்து படைத்தனர்.
தேனியில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் நடிகர் செந்தில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். தேனி மாவட்டம் தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் திரைப்பட நடிகர் செந்தில் தனது மனைவியுடன் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொண்டார் .
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேனி நகர் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை தனது மனைவியுடன் சேர்ந்து தரிசித்துச் சென்றார் . நடிகர் செந்திலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கோயிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் நடிகர் செந்திலை பார்த்ததும் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இதே போல் சின்னமனூர் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து கிடா வெட்டி வழிபாடு செய்தார். நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 1ந் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும் நடிகர் தனுசுவின் தந்தையுமான கஸ்தூரிராஜா, அவருடைய மனைவி விஜயலட்சுமி, நடிகர் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர்கள் அனைவரும் போடி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி விருந்து படைத்தனர்.
அப்போது கருப்பசாமி கோவிலுக்கு வருகை தந்த தனுஷ் பொதுமக்களுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் கிடா விருதில் கலந்து கொண்டு உணவருந்தினார். அதனைத் தொடர்ந்து கோவில் சன்னதியில் அமைந்துள்ள மூலவர் சிலையின் முன்பு அமர்ந்து தனது வேண்டுதல்களை வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.





















