![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP Nadu Impact: தெருவுக்கு சிவகங்கை நகராட்சி சேர்மன் பெயர்; உயர்நீதி மன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு
சுய லாபத்திற்காக, தலைவர்களின் பெயரை அகற்றிவிட்டு தங்கள் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
![ABP Nadu Impact: தெருவுக்கு சிவகங்கை நகராட்சி சேர்மன் பெயர்; உயர்நீதி மன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு ABP Nadu Impact Sivaganga Municipality Chairman filed case in Madurai High Court branch against putting his name on streets TNN ABP Nadu Impact: தெருவுக்கு சிவகங்கை நகராட்சி சேர்மன் பெயர்; உயர்நீதி மன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/d5d28d618cf0d0c0ac02b57ca5141398_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பாக நகர் மன்ற தலைவர் ஒப்புதல் அடிப்படையில் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் பல்வேறு விசயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சிவகங்கை நகர் மன்ற சேர்மன்கள் மற்றும் தற்போதைய சேர்மன் பெயரும் வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த பிரச்னை தொடர்பாக Abp நாடு செய்தித் தளத்தில் Sivagangai: தெருக்களுக்கு தனது பெயர் வைக்க திமுக சேர்மன் தீர்மானம் நிறைவேற்றம் - கொதிக்கும் சிவகங்கை மக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் முன்னாள் மற்றும் தற்போதை நகராட்சி தலைவரின் பெயர்களை வைக்க நகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
![Sivagangai DMK Chairman passes resolution to name streets after him TNN Sivagangai: தெருக்களுக்கு தனது பெயர் வைக்க திமுக சேர்மன் தீர்மானம் நிறைவேற்றம் - கொதிக்கும் சிவகங்கை மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/04/913d2fbfb744aac312f538b73a7020581688470852019184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
![ABP Nadu Impact: தெருவுக்கு சிவகங்கை நகராட்சி சேர்மன் பெயர்; உயர்நீதி மன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/04/daf7556d063d6228db93c2a66d10e30f1688470265951184_original.jpeg)
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)