Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
ஃபெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் கேரளாவில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கனமழை எச்சரிக்கை:
சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகியவற்றில் உள்ள சபரிமலை பக்தர்கள் மையத்திற்கும் இந்த வானிலை முன்னறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலை வரும் பக்தர்கள், மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு கவனமாக தங்களின் சபரிமலை பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சபரிமலை சன்னிதானம் பகுதியில் இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்:
இந்த சூழலில் சபரிமலை கோவில் மற்றும் பம்பாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. பம்பா ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. டிடிஎம்ஏ தவிர, நீர்ப்பாசனத் துறையும் பம்பாயில் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விரைவு நடவடிக்கைக் குழுவினர், தீயணைப்புப் படையினர் மற்றும் கோயில் வளாகத்தில் முகாமிட்டுள்ள போலீஸார் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில், சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்னிதானத்தில் லேசான மழை தொடங்கி, சனிக்கிழமை மாலை தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை(இன்று 01.12.2024) காலை பலத்த மழை பெய்தது. நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நீலிமலை பாதையில் மொத்தம் 18 நடைபந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் மரக்கூட்டத்திலிருந்து சரம்குத்தி வரை வரிசை நிற்கும் வளாகமும் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "புயல் எதிரொலி” தியேட்டர்கள் இயங்காது என அறிவிப்பு..!
இதனால், மக்கள் மழையில் சிக்காமல் எளிதாக நடந்து சென்று வழிபடுகின்றனர். ஆனால், பம்பாவில் கனமழை பெய்து வருவதால், சன்னிதானத்தில் இருந்து சந்திரநாதன் சாலை, சுவாமி ஐயப்பன் சாலை வழியாக இறங்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஃபெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் கேரளாவில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.