மேலும் அறிய
Advertisement
மதுரையின் பிரபல ஷாப்பிங் மாலில் தீ விபத்து.. செய்தியாளர்களிடம் அடாவடி செய்த ஊழியர்களால் பரபரப்பு..
வணிக வளாகத்தின் அருகில் பெட்ரோல் பங்க், பள்ளிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உள்ள நிலையில் இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விஷால் டி மாலில் தீ விபத்து,1000-க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றம், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் விஷால் டி மால் எனும் தனியார் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. மதுரையின் பெரிய ஷாப்பிங் மால் என்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வணிக வளாகத்தின் நான்காவது மாடியில் உள்ள பானிபூரி கடையில் தீப்பிடித்து வளாகம் முழுவதும் பரவியதாக சொல்லப்படுகிறது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள விஷால் டி மாலில் தீ விபத்து,1000க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தீ விபத்து குறித்து உண்மை நிலை அறிய உள்ள செல்ல முயன்ற செய்தியாளரை மிரட்டிய விஷால் டி மால் ஊழியர்கள்.#madurai | #vishaaldmal | #fire @k_for_krish | #abp pic.twitter.com/jEkxJYQJ9r
— arunchinna (@arunreporter92) December 24, 2023
இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி வணிகத்தில் இருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களை தீயணைப்புத்துறையின் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது. மேற்படி நிகழ்வு தொடர்பாக உயிர் சேதம் ஏதும் இல்லாத நிலையில், உடனடியாக உள்ளே இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல்துறையினர் மூலம் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
மதுரையின் நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த வணிக வளாகத்திற்கு ஏற்கனவே 2011-ஆம் ஆண்டு அப்போதைய ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் செயல்பட அனுமதி கொடுக்காத நிலையில், அவர் மாற்றத்திற்கு பின்பாக திறக்கப்பட்ட இந்த வணிக வளாகம் தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
வணிக வளாகத்தின் அருகில் பெட்ரோல் பங்க், பள்ளிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி உள்ள நிலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத இந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு இந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. காவல்துறை துணை ஆணையர், ஆர்.டி.ஓ., , வடக்கு வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் தற்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வணிக வளாகத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் செல்போனை பறித்து அடாவடித்தனம் செய்ததோடு, குண்டர்களை ஏவி செய்தியாளர்களை அவமானப்படுத்திய வணிக வளாக ஊழியர் மற்றும் நிர்வாகிகள் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக செய்தியாளர் சங்க நிர்வாகி ரமேஷ் தெரிவித்தார்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion