மேலும் அறிய
Advertisement
Crime: விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தை! 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!
மதுரையில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை காணாமல் போன நிலையில் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 24 மணி நேரத்தில் குழந்தை மீட்பு.
குழந்தையை கடத்திய இரு பெண்கள் கைது - ஸ்கூட்டியில் நள்ளரவில் குழந்தையை கடத்திச் சென்றது, விற்பனை செய்ய முயன்றது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலம்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலைய பகுதியில் யாசகம் பெற்றுவந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக மேலமாசி வீதி பகுதியில் பள்ளிவாசல் முன்பாக யாசகம் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மேலமாசி வீதி பகுதியில் சுந்தரி தனது மகன் பாலமுருகன், தனலெட்சுமி, சக்திபிரியா ஆகிய 3 குழந்தைகளுடன் படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிகாலை 3 மணி எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்தி பிரியாவை (6 மாதம்) காணவில்லை, அப்போது பதற்றமடைந்த சுந்தரி அருகில் அங்கும் தேடியுள்ளார். இதனால் அச்சமடைந்த சுந்தரி் தனது 6 மாத பெண் குழந்தை காணாமல் போனது குறித்து திடீர்நகர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து காவல்துறையினர் மேலமாசி வீதி பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அதில் இரு பெண்கள் ஸ்கூட்டியில் வந்து தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்திசென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சியனை காண்பித்து குழந்தையின் தாயார் சுந்தரியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் இரு பெண்கள் தன்னிடம் வந்து பெண் குழந்தை தந்தால் பணம் தருவதாக கூறி குழந்தையை கேட்டதாகவும், ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த வாரம் இரு பெண்களும் வந்த ஸ்கூட்டியின் பதிவெண் அடிப்படையில் அவர்களின் வீட்டு முகவரிக்கு சென்று அங்கிருந்து கடத்தப்பட்ட 6 மாத பெண் குழந்தையை மீட்டுள்ளனர். இதையடுத்து பெண் குழந்தையை கடத்தியதாக மதுரை மேல பனங்காடியை சேர்ந்த செந்தாமரை என்ற பெண்ணும் அவரது உறவினரான மதுரை சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி ஆகிய இரு பெண்களையும் திடீர்நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.
துரிதமாக மீட்பு
இதனையடுத்து இருவரிடமும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த வாரம் இருவரும் சுந்தரியை சந்தித்து குழந்தையை கேட்ட நிலையில் சுந்தரி தர மறுத்த நிலையில் நேற்று முன்தினம் உறங்கிகொண்டிருந்த சுந்தரியின் 6 மாத பெண் குழந்தையை பணத்திற்கு விற்பனைக்காக கடத்தியது தெரியவந்துள்ளது.
சாலையோரம் உறங்கிகொண்டிருந்த தாயாரிடம் இருந்து 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட புகாரில் 24 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட திடீர்நகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படை காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாரட்டினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion