Madurai : ஒரு மாத உழைப்பு! 300 கிலோ எடையில் முனிக் கோயிலுக்கு வந்த 21 அடி நீள அரிவாள்!
21 அடிநீள அரிவாள் தயாரிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 300 கிலோ எடை கொண்ட இந்த அரிவாளை 4 பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் தயாரித்துள்ளனர்

மதுரை மாவட்டம் மேலூர், நான்கு வழிச்சாலையில் முனிக்கோயில் அமைந்துள்ளது. மேலூர் பகுதி மக்கள் துடியான தெய்வமாக பார்ப்பதால். சாலையில் செல்லும் பலரும் மனதில் வேண்டிக்கொண்டு தான் செல்வார்கள். பேருந்து பயணிகள் கூட சில்லரைகளை முனியனுக்கு காணிக்கையிட்டு செல்வார்கள். இந்நிலையில் திருப்புவனத்தில் முனிக் கோயிலுக்கு 21 அடி நீள அரிவாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர்,முனிக்கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக பொன்னமராவதியைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் ஆர்டரின் பேரில் 21 அடிநீள அரிவாள்தயாரிக்கப் பட்டுள்ளது. மொத்தம் 300 கிலோ எடை கொண்ட இந்த அரிவாளை 4 பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் தயாரித்துள்ளனர்@mani9726 @sapiens_2k @ManiTamilMP pic.twitter.com/rjgnehosW0
— Arunchinna (@iamarunchinna) June 15, 2022


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

