75th Republic Day: மதுரையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு - ரூ.2 கோடியே 76 லட்சத்து 68 ஆயிரத்து 807 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிய பிறகு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு பல்வேறு துறை சார்ந்த 38 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 76 லட்சத்து 68 ஆயிரத்து 87 ரூபாய் திட்ட மதிப்பீட்டில் - நலத்திட்ட உதவிகளை வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர்.
இந்திய திருநாட்டில் 75வது குடியரசு தினம் கோலாலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய வேளையில் மதுரை ஆயுதப்படை மைதானம் பகுதியில் இன்று மூவர்ண தேசியக் கொடியை மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா ஏற்றினார். இந்த நிகழ்வில் மதுரை மாநகர் காவல் ஆணையாளர் லோகநாதன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே, தென்மண்டல ஐ.ஜி., நரேந்திர நாயர், மதுரை சரக டி.ஐ.ஜி., ரம்யா பாரதி ஆகியோர் பங்கேற்ற நிலையில் மூவர்ண இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பிறகு வண்ண பலூன்களை பறக்க விட்டதைத் தொடர்ந்து சமாதான புறாவை பறக்க விட்டார்.
அதனைத் தொடர்ந்து காவலர் பேண்ட் இசை வாத்தியங்கள் முழங்க வீறு நடை போட்டு வந்த காவல் துறையினர் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து காவல்துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கத்துடன் கூடிய சான்றிதழ்களை வழங்கி அவர்களை கௌரவித்தார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, மேலாண்மை துறை, தோட்டக்கலத்துறை, மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ,மாவட்ட தொழில் மையம் அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 38 நபர்களுக்கு - 2,76,68, 807 ரூபாய் மதிப்பீட்டில் வருடாந்திர பராமரிப்பு மானியம், இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், இயந்திரம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி ,விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ,மகளிர் சுய உதவி குழு, தேய்ப்பு பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து அவர்களுக்கு மரியாதை செய்தார். இந்த நிலையில் அனைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரியாதை செய்யவில்லை என்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தொலைந்து போன தனது நகைக்கும் ரொக்க பணத்தையும் மீட்டு தரக்கோரி புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை சுதந்திரப் போராட்ட தியாகி வாரிசுதாரரான கார்த்திகேயன் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?