மேலும் அறிய
Advertisement
மதுரையில் பூட்டிய ரயில்வே கேட்டின் மீது மோதிய 74 வாகனங்கள் பறிமுதல் - ரயில்வே நிர்வாகம் தகவல்
மதுரை கோட்டத்தில் விபத்துகளில் சிக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் கொடி அசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரச்சாரம் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை தலைமையில் நடைபெற்றது.
BRIEF ON ILCAD & ISSUES IN LEVELCROSSING GATES
மதுரை ரயில்வே கோட்டப் பகுதியில் உள்ள பூட்டிய ரயில்வே லெவல் கிராசிங் கேட்டுகளில், கடந்த 2023 ஆண்டில் மோதி விபத்து ஏற்படுத்திய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரயில்களை விபத்து இல்லாமல் இயக்க சாலைகள் சந்திக்கும் இடங்களில் லெவல் கிராசிங் கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் வரும்போது இந்த கேட்டுகள் இருபுறமும் பூட்டப்படும். இதன் மூலம் ரயிலில் சாலை வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் கவனக்குறைவாக வேகமாக வாகனங்களை இயக்குவோர் ரயில்வே கேட்டுகளில் மோதி இடித்து விபத்து உண்டாக்குகின்றனர்.
எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள்
மதுரை கோட்டத்தில் இது மாதிரி விபத்துகளில் சிக்கிய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது மாதிரியான குற்றச்செயல்களுக்கு ரயில்வே சட்டப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், வாய்ப்பிருக்கிறது. ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஆறு மாத சிறைத்தண்டனை, அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ரயில்வே கேட்டுகளுக்கு முன்பாக இருபுறமும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ரயில் பாதையை கடந்து விபத்தை தவிர்க்க வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோட்ட ரயில்வே மேலாளர் கொடி அசைத்து பிரச்சாரம்
இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று வியாழக்கிழமை (ஜூன் 6) உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. மண்டல போக்குவரத்து அதிகாரி அலுவலகம் பெட்ரோல் பங்குகள் பேருந்து நிறுத்தங்கள் சந்தை வளாகங்கள் லெவல் கிராசிங் கேட்டுகள் ஆகிய இடங்களில் கூடும் சாலை வாகன உபயோகிப்பாளர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. முன்னதாக இதற்கான பிரச்சார வாகனத்தை கோட்ட ரயில்வே மேலாளர் கொடி அசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பிரச்சாரம் முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை தலைமையில் நடைபெற்றது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion