மேலும் அறிய
Advertisement
மதுரையில் பைக் வீலிங் செய்த 39 பேர் கைது; இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் - போலீஸ் அதிரடி
மதுரையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் செய்த 39 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர் பகுதிகளில் பைக்ரேஸ், வீலிங், சைலன்ரை மாற்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் மாநகர போலிஸ் கமிஷ்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் பைக் ரேஸ்:
மதுரை மாநகரில் இளைஞர்கள் பைக்குகளில் சைலன்சரை மாற்றி அதிவேகமாக போக்கில் செல்லும் போது ஏற்படும் அச்சத்தால் விபத்துகள் அதிகரித்துவருகிறது. இதன் எதிரொலியாக மதுரை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பைக்குகளின் வேகத்தை குறைக்க 71 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டதோடு, 48 இடங்களில் ZIG ZAG தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மதுரை மாநகரில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 4647 வழக்குகளும், அபாயகரமாக வாகனம் ஓட்டியதாக 995 வழக்குகளும் மற்றும் சைலன்ஸரை மாற்றி வாகனம் ஓட்டியதாக 2495 வழக்குகளும் பதிவு செய்து மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் மாநகர காவல்துறையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
39 பேர் கைது:
இதேபோன்று மாநகர் பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் மற்றும் சாகசங்கள் செய்த 39 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் தொடர்ந்து பைக்குகளில் ரேஸ் மற்றும் வீலிங் சாகசங்கள் செய்யும் வாகன ஓட்டிகளின் மீது வாகனங்களை பறிமுதல் செய்தல், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தல் மற்றும் சிறை தண்டனை போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகர காவல்துறை ஆணையர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 61% பேர் பைக்குகளில பயணிப்பவர்களாகவே உள்ளனர் இதில் 80% பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால் உயிரிழக்கின்றனர்- வாகனம் ஓட்டுபவர்கள் தவிர பின்னால் உட்கார்ந்து செல்வபவர்களும் தலைக்கவசம் அணிவது முக்கியம், ஏனெனில் அவர்களில் 30% பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழக்கின்றனர். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என மாநகர காவல்துறை செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் அச்சம்:
மாநகர காவல்துறை சார்பில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தெப்பக்குளம் சாலை, நத்தம் சாலை, வைகை கரையோர சாலை, பைபாஸ் சாலை, தபால்தந்தி நகர் சாலை, தெற்குவாசல் , திருப்பரங்குன்றம் சாலை , அழகர்கோவில் சாலை ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் , கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்ரேஸில் ஈடுபட்டுவருவதால் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்துவருகிறது.
எனவே இதுபோன்று பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், மேலும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காவல்துறையினர் வாகன தணிக்கையில் சிக்கினாலும் காவல்துறை உயர் அதிகாரிகள் சிலரது பெயரை பயன்படுத்தியும், அதிகாரத்தில் உள்ள நபர்களின் பெயர்களை பயன்படுத்தியும் தப்பி சென்றுவிடும் நிலை நீடித்துவருகிறது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion