கம்பம் அருகே இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே இரண்டு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் உட்பட 3 பேர் உயிரிழப்பு.
இரு இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபததுக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மராஜ் (23) , லியோசெம்மன் (26) மற்றும் லோயர்கேம்ப் பகுதியில் தங்கி வேலை செய்து வருபவர் நாமக்கல் பகுதியை சேர்ந்த ராஜேஸ்குமார் (33). கூடலூரை சேர்ந்த தர்மராஜ் மற்றும் லியோசெம்மன் ஆகியோர் தங்களது இரண்டு சக்கர வாகனத்தில் இருவரும் கம்பத்திலிருந்து கூடலூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த ராஜேஸ்குமாரும் தனது இரண்டு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். கம்பத்திலிருந்து கூடலூர் செல்லும் வழியில் துர்க்கையம்மன் கோவில் அருகே இரு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
தேனி: கடந்த 6 மாதத்தில் கஞ்சா விற்ற 36 பேர் கைது; 10 பேர் மீது குண்டர் சட்டம்
இந்த விபத்தில் மூன்று பேரும் படுகாயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவத்தை பார்த்த அருகிலிருந்தவர்கள் கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்த வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை செய்தனர்.
உயிரிழந்தவர்களை போலீசார் கம்பம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த தர்மராஜ் (23) ராணுவத்தில் பணியாற்றி வருவதும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளதும் இவருக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆனதும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே விபத்து. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
சாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் பாரதி மற்றும் அவரது ஜூனியர் வழக்கறிஞர் மோனிகா ஆகிய இருவரும் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கிற்காக சென்று விட்டு சாத்தூரை நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் கொடைரோடு மெட்டூர் பாலம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது நிலைத்திடுமாறி சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளாகி கார் எதிர்ப்புறம் சாலையில் உருண்டோடியது.
இதில் ஜூனியர் வழக்கறிஞரான மோனிகா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அசோக் குமார் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மைக்கேல் பாரதி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து அம்மைநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















