Palani: முருகனுக்கு அரோகரா! பழனியில் உண்டியல் காணிக்கை மட்டும் இத்தனை கோடியா?
உலகப்புகழ் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் முதல் நாள் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதன் மூலம் 2 கோடியே 58 இலட்சத்து 37,372 கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில், சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
IND vs AUS: தொடரை வெல்லுமா இந்தியா? வாய்ப்பை தக்க வைக்குமா ஆஸ்திரேலிய அணி? இன்று 4வது டி20 போட்டி!
அறுபடை வீடான பழனி:
அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து நேற்று எண்ணப்பட்டது. நேற்று முதல் நாள் எண்ணிக்கை முடிவில் ரொக்கம் ரூபாய் 2 கோடியே 58 இலட்சத்து 37 ஆயிரத்து 372 கிடைத்துள்ளது.
TN Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. மண்டலமாக வலுப்பெற்றது..
பக்தர்கள் தங்கம் மற்றும் வெள்ளியாலான தாலி, கொலுசு, வேல், காவடி. மோதிரம் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1383 கிராமும், வெள்ளி 12992 கிராமும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 406ம் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, என பலர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடரும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Mettur Dam: தமிழகம், கர்நாடகத்தில் கொட்டும் மழை! மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரம் என்ன?