மேலும் அறிய

IND vs AUS: தொடரை வெல்லுமா இந்தியா? வாய்ப்பை தக்க வைக்குமா ஆஸ்திரேலிய அணி? இன்று 4வது டி20 போட்டி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் 4வது போட்டி இன்று ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடக்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும், ஆனால் இன்று வெற்றி பெறவில்லை என்றால் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் தொடரை தீர்மானிக்கும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும்.

பேட்டிங்கில் மாற்றம்..? 

இன்றைய போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் பதினொன்றில் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது. துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டருக்கு திரும்பலாம். இதையடுத்து, திலக் வர்மாவுக்குப் பதிலாக ஐயர் சேர்க்கப்படலாம். ஏனென்றால் இதுவரை திலக் வர்மா மட்டுமே  குறிப்பிடத்தக்க இன்னிங்ஸ் எதுவும் விளையாடவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் ரன் குவித்ததால், திலக்கிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.

பந்துவீச்சு எப்படி இருக்கும்..? 

இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையிலும் மாற்றங்கள் செய்யப்படலாம். முதல் இரண்டு டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் தனது திருமணத்திற்காக பிசிசிஐயிடம் விடுப்பு கோரியதால் மூன்றாவது டி20 போட்டியில் விளையாட முடியவில்லை. மூன்றாவது போட்டியில் அவருக்குப் பதிலாக அவேஷ் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது, அவரும் சிறப்பாக பந்துவீசினார். இருப்பினும், கவுகாத்தியில் நடந்த கடைசி போட்டியில் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுகொடுத்து ஏமாற்றம் அளித்தார். எனவே, பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 

ஆஸ்திரேலிய அணியில் இத்தனை மாற்றங்களா..?

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஜம்பா இரண்டாவது போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினர். பின்னர் மூன்றாவது போட்டிக்குப் பிறகு கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினர். இப்போது பென் மெக்டெர்மாட், பென் ட்வார்ஷுயிஸ், கிறிஸ் கிரீன் ஆகியோர் இன்றைய ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பர்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆஸ்திரேலிய அணி: 

டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மாட், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கிறிஸ் கிரீன், தன்வீர் சங்கா, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப். 

மழைக்கு வாய்ப்பு இருக்கா..? 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டி20 போட்டி நடைபெறுகிறது. weather.com இன் படி , இன்று அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி, போட்டியின் போது மட்டுமல்ல, நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லை. வானம் தெளிவாக இருக்க வாய்ப்புள்ளது. 

வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மாலை ஐந்து மணி வரை வானத்தில் சில மேகங்கள் இருக்கலாம், ஆனால் அதன் பிறகு வானம் முற்றிலும் தெளிவாக இருக்கும். அதாவது மழையால் ஆட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. பகல் நேரத்தில் மணிக்கு 6 முதல் 10 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget