மேலும் அறிய

மதுரையில் 2லட்சத்து 64 ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்

சொட்டு மருந்து பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமினை தொடங்கிவைத்தார். 2 லட்சத்து 64ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்.

போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் 1705 இடங்களில் 2லட்சத்தி 64ஆயிரத்தி 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் செட்டிக்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். இதேபோல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் பேருந்துநிலையபகுதியில் நடைபெற்ற முகாமினை மேயர் இந்திராணி , ஆணையாளர் தினேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தார். மாவட்ட முழுவதும் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து  முகாமில் பிறந்தது முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல் பகுதிகள், நரிக்குறவர் குடியிருப்புகள், இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மதுரையில் 2லட்சத்து 64 ஆயிரத்து 839 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயம்
 
இந்த சொட்டு மருந்து மையங்கள்  அரசு மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் இடங்களில் காலை  தொடங்கி மாலை 5மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்த முகாமிற்காக கூடுதலாக நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்பட்டுவருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 13 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இதைத் தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 17 மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 200 மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்துவருகின்றனர். இந்தப் பணியில் சுகாதாரத் துறை மூலமாக 1037 பணியாளர்கள், சத்துணவுத் துறை மூலமாக 2545 பணியாளர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக 42 பணியாளர்கள் உட்பட 6154 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று நடைபெறும் முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு 04.03.2024 மற்றும் 05.03.2024 ஆகிய இரு தினங்களில் வீடுதோறும் சென்று சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
கோவில் சொத்து முறைகேடு ; 400 சவரன் நகை , 2 கோடி பணம் எங்கே ? பொதுமக்கள் போராட்டம்
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
Mahindra THAR: என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
என்ன இப்படி பண்ணிட்டீங்களே.?! பிரபல SUV THAR-ன் விலையை ஏற்றிய மஹிந்திரா; எவ்வளவு தெரியுமா.?
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
Embed widget