Komagan Death: ‛ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...’ ஆட்டோகிராப் பாடகர் கோமகன் கொரோனாவுக்கு உயிரிழப்பு
காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும் என இயக்குநர் சேரன் ட்வீட் செய்துள்ளார்.
‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பிரபலமான பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
சேரன் இயக்கிய ‘ஆட்டோகிராப்’ படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் பிரபலமானவர் மாற்றுத்திறனாளி கோமகன். கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டர் இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. <br>கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. <a href="https://t.co/UrF3xebRO3" rel='nofollow'>pic.twitter.com/UrF3xebRO3</a></p>— Cheran (@directorcheran) <a href="https://twitter.com/directorcheran/status/1390138424783298560?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 6, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
பாடகர் கோமகனின் மறைவுக்கு இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்..’ எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், பலர் கோமகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.