மேலும் அறிய

Travel With ABP : காஞ்சிபுரம் காமாட்சி தெரியும், ஆதி காமாட்சி அம்மன் கோயில் தெரியுமா?

Kanchipuram Sri Adhi Kamakshi Amman Temple : உற்சவ அம்பிகையுடன் சரஸ்வதி மகாலட்சுமி அருள் புரிவதால் கல்வி சிறக்கவும் , செல்வம் வளம் பெறவும், சங்கடங்கள் தீர்க்கவும் வழிவகை செய்யப்படுவதாக ஐதீகம்..

காஞ்சிபுரம் என்றாலே கோயில் மற்றும் திருவிழா நகரம்தான். காஞ்சிபுரம் நகர் முழுவதுமே, புராதான மற்றும் பழமையான கோயில்கள் நிறைந்த நகரமாக உள்ளது. அந்த வகையில் தொடர்ந்து நாம் Travel With Abp தொடரின் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் இருக்கும் கோயில்கள் குறித்து, பார்த்து வருகிறோம் ( Kanchipuram Temple City ). அந்த வகையில் இன்று அருள்மிகு ஆதி காமாட்சி திருக்கோயில் பற்றி பார்க்க உள்ளோம்.

ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில்

ஆதி காமாட்சி அம்மன் என அழைக்கப்படும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது.

அசுரர்கள் தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என பூலோகம் வந்து, அம்பிகையை வேண்டி தவம் இருந்தனர். அசுரர்களை அழிக்க அம்பிகை காலை வடிவம் கொண்டதால் இந்த கோயிலுக்கு காளி கோட்டம் என்ற பெயரும் உண்டு . 

Travel With ABP : காஞ்சிபுரம் காமாட்சி தெரியும், ஆதி காமாட்சி அம்மன் கோயில் தெரியுமா?

பண்டன் என்ற அசுரனை சிறுமி வடிவம் கொண்டு, அம்பிகை அழைத்த பிறகு தேவர்களுக்கு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். கருணை கொண்ட கடவுள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றார். இக்கோயிலில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபமும் கொடி மரமும் அமைந்துள்ளது ‌. கருவறை அருகே உள்ள ஸ்ரீ சர்க்கரை இயந்திரத்திற்கு நாள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது. அம்மன் கோயில் என்பதால் துவார பாலகிகள் பாதுகாப்பிற்கு இருக்கும் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன .

கோயில் சிறப்பு அம்சம்

இக்கோயில் விஷ்வகர்மா சமுதாய மக்கள் அதற்காக போற்றப்பட்டு வருகிறது. இக்கோயில் அருகே கம்பளத்தெரு அமைந்துள்ளது. அதேபோன்று கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி, ஆதிசங்கர ஆகியோருக்கு தனி சன்னதிகளும் அமைந்துள்ளன. கோயிலில் சிவலிங்கத்தில் பானம் எனப்படும் ருத்ர பாகத்தில் இறைவியின் அமர்ந்த கோலமும் காணப்படுவது சிறப்பம்சமாகும். அம்பாள் தனது கரங்களில் உடுக்கை,  சூலம் , கபாலம் ஆகியவற்றை தாங்கிக் காய்ச்சியிருக்கிறார். பிற கோவில்களில் இது போன்ற வடிவில் காணக் கிடைக்காதது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த வடிவை சக்தி லிங்கம் என அழைக்கின்றனர்.Travel With ABP : காஞ்சிபுரம் காமாட்சி தெரியும், ஆதி காமாட்சி அம்மன் கோயில் தெரியுமா?
உற்சவ அம்பிகையுடன் சரஸ்வதி மகாலட்சுமி அருள் புரிவதால் கல்வி சிறக்கவும் , செல்வம் வளம் பெறவும், சங்கடங்கள் தீர்க்கவும் பக்தர்களுக்கு வழிவகை செய்யப்படுவதாக ஐதீகம்.

முக்கிய திருவிழா

பௌர்ணமி நாளன்று நடைபெறும் பௌர்ணமி பூஜை மிக முக்கிய விழாக்களின் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பௌர்ணமி நாளன்று இரவில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.  அதேபோன்று பக்தர்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

Travel With ABP : காஞ்சிபுரம் காமாட்சி தெரியும், ஆதி காமாட்சி அம்மன் கோயில் தெரியுமா?

நவராத்திரி விழா 13 நாள் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி விழாவின் போது முதல் ஒன்பது நாட்கள் அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவார்.  

நவராத்திரி விழாவில் பதினோராம் நாளில் அம்பிகை சந்தன காப்பிட்டு கடைசி நாள் அன்று அம்பிகை புஷ்ப பல்லாக்கு புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.  நவராத்திரி விழா ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது

அர்த்தநாரீஸ்வர லிங்கம்

இந்த லிங்கத்திற்கு சக்தி லிங்கம்  என்று அழைக்கப்படுகிறது. திருமணம் தடை நீங்க விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சக்தி லிங்கத்திற்கும் ஆதி காமாட்சி விளக்கும் அபிஷேகம் செய்தால்,  விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.  

பிரிந்து தம்பதிகள் மீண்டும் இணையவும் திருமணமானவர்கள் ஒற்றுமையாக வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நெய்வேதியும்,  செய்து வணங்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Breaking News LIVE: இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Shocking Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Embed widget