Kanchipuram Traffic Diversion: காஞ்சிபுரம் வாகன ஓட்டிகளே உஷார்... திடீர் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல் இங்கே ..
Kanchipuram Traffic Diversion: திமுக பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரம் வரவுள்ளதையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்தது
காஞ்சிபுரத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வர உள்ளதால், காஞ்சிபுரம் நகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
திமுக பவள விழா பொதுக்கூட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று (28 ஆம் தேதி ) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த முக்கூட்டத்திற்கு , திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தரம் வரவேற்புரையாற்றுகிறார்.
கூட்டணி கட்சிகள் பங்கேற்பு
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கி. வீரமணி, இரா. முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா பொன்.குமார் கருணாஸ், கு. செல்வப்பெருந்தகை, வைகோ, கே.எம்.காதர்மொய்தீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், அதியமான், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், கே. பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், ஜி.எம்.தர் வாண்டையார், தமீமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை என்ன தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால் , திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. விழா மேடைகள் அமைக்கப்பட்டு, பிரம்மாண்டமான முறையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் போக்குவரத்து மாற்றம்
திமுக பவளவிழா பொதுக்கூட்டத்துக்கு முதல்வா் இன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் வருகை தர இருப்பதையொட்டி காஞ்சிபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போக்குவரத்து மாற்றம் அமலில் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் என்னன்ன ?
காஞ்சிபுரம் மாநகருக்கு முதலமைச்சர் வருவதையோட்டி முன்னேற்பாடாக, பாதுகாப்பு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் நகருக்குள் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையான கீழம்பி மற்றும் வெள்ளைகேட் வழியாகச் வர வேண்டும்.
கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் கீழம்பி, செவிலிமேடு, ஓரிக்கை சந்திப்பு, பெரியாா் நகா் வழியாக வர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள் பழைய ரயில் நிலையம் சாலை, வையாவூா் வழியாக செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து விழாவிற்கு வருவோா், பொதுமக்கள் வாலாஜாபாத், முத்தியால்பேட்டை வழியாக வர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தெரிவித்து
விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் செவிலிமேடு, ஓரிக்கை சந்திப்பு, பெரியாா் நகா் வழியாக விழா நடைபெறும் இடமான காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்துக்கு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் வரவுள்ளதால் , காஞ்சி மாநகரம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ள.