மழையால் பாதித்த சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்நிதியுதவி - காஞ்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச நிதியுதவியாக ரூ.1 இலட்சமும் அதிகபட்ச நிதியுதவியாக ரூ.3 இலட்சமும், 6% வட்டியில் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் சமீபத்திய வெள்ளத்தால் - பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்கான கடன் நிதியுதவி விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர்கலைச் செல்வி தகவல்
தமிழ்நாட்டில், சமீபத்தில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மறுசீரமைப்பிற்கான நிதியுதவியினை, தமிழக அரசின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் சார்பில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச நிதியுதவியாக ரூ.1 இலட்சமும் அதிகபட்ச நிதியுதவியாக ரூ.3 இலட்சமும், 6% வட்டியில் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற கீழ்க்கண்ட நிறுவனங்கள் தகுதி பெற்றவர்கள்:
அ) கடந்த 30.09.2023-அன்று நிறுவனம் நடைமுறையில் இருந்திட வேண்டும்.
ஆ) கடந்த 01.04.2023 முதல் 30.09.2023 வரையுள்ள, அரையாண்டு வருமானத்தில் GSTR Returns அல்லது C.A. Certificate (with UDIN)-படி, 20% வரை கடனாக, அதிகபட்சம் ரூ.3இலட்சம் வழங்கப்படும்.
இ) முதல் மூன்று மாதங்கள் வட்டி மட்டும் செலுத்த வேண்டும்.
ஈ) நான்காவது மாதம் முதல் 21வது மாதம் வரை (18 மாதங்கள்) பிரதி மாத அசல் தவணையுடன் சேர்த்து, வட்டி செலுத்திட வேண்டும்.
உ) வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறையிலுள்ள நிறுவனங்கள் மட்டும்.( வர்த்தகம் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் தவிர்த்து)
ஊ) நிறுவனங்களின் மூலதனம் மற்றும் பிணையச் சொத்து ஏதுமில்லை.
எ) இத்திட்டம் 31.01.2024 வரை நடைமுறையில் இருக்கும்.
இது சார்பாக மாவட்டத் தொழில் மையத்துடன் இணைந்து, விழிப்புணர்வு முகாம் கீழ்க்கண்ட அட்டவணையின்படி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் நாள் நேரம் |
முகாம் நடைபெற உள்ள இடம் |
12.01.2024 காலை 11.00 முதல் மாலை 4.00 வரை
|
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கட்டிடம், சிட்கோ தொழிற்பேட்டை திருமுடிவாக்கம் |
இந்த சிறப்பு நிதியுதவி முகாமினில் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர், பங்குபெற்று பயனடையுமாறு, கேட்டுக்கொள்கிறோம். மேலும் 31.01.2024 வரை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் TIIC, மறைமலை நகர் கிளையினை தொடர்புகொள்ளலாம் அல்லது https://www.tiic.org/ என்ற இணையதளத்தின் வழியாக நேரடியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.
மறைமலை நகர் கிளை
HIG No. 42 & 43 முதல் தளம்,
எம்.ஜி.ஆர் சாலை,
மறைமலை நகர் - 603209
தொலைபேசி: 044-27451650,
இமெயில்: bmtambaram@tiic.org